ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை, அதிகார பகிர்வு, அவசியம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மதுரை மாநகர் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்.ராஜகண்ணப்பன், இந்த தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி எதிர் கட்சியாக வரப்போவது பாஜக தான். 93 சீட்டு இருந்தபோதே கலைஞர் ஆட்சியில் பங்கு தரவில்லை, இந்த தேர்தலில் 170 சீட்டுகளில் உதயசூரியன் நிற்கும், 160 சீட்டுகளில் வெற்றிபெறுவோம். முதலமைச்சரே கூட்டணியில் பங்கு இல்லை என முதலமைச்சரே சொல்லிட்டாரு. அதனால் கூட்டணி கட்சியை பற்றி பேச தேவையில்லை என்று பேசினார்.
அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை . மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மாணிக்கம் தாகூர் திமுகவுடனான பங்கீடு பேச்சின்போது காங்கிரஸ் முடிவு என்ன என்பது தெரியவரும் என்று பேசியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் நேற்று மகளிர் உரிமை தொகை தொடர்பாக பதிவிடும் போதும், ராகுல்காந்தி திட்டங்களை முன்வைத்து பேசியிருந்ததால் திமுக வட்டாரத்தில் சற்று சலசலைப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் சூழலில் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி அதிகாரத்தில் பங்கு என்று வெளிப்படையாக பேசியிருப்பது திமுக தொண்டர்களை கோபமடைய செய்து உள்ளது. இது தொடர்பான கருத்துக்கு மாணிக்கம் தாகூரை தொடர்பு கொள்ள முயலவில்லை. விரைவில் இது தொடர்பாக விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
