சவரன் ஒரு லட்ச ரூபாயை தொட்ட ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இன்றைய (டிசம்பர் 24) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து தற்போது அறியலாம்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக விற்பனையானது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,080 ரூபாய் அதிகரித்துள்ளது. அண்மை நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது. இதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

அதன்படி கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தங்கத்தின் விலை முதல் முறையாக கடந்தது. இதனால் நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் கவலையடைந்தனர்.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ1,02,160க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனையானது. வெள்ளி விலையும், கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.234க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் அதிகரித்து வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது
அதன்படி, இன்றும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிச.24) ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ. 30 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை முதல் ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமும் ரூ.10 உயர்ந்து ரூ.244க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version