கடற்கரையில் நாய்களுக்கு உணவு வைக்கும் நபர்களின் செல்போன்களை காவலர்கள் பிடுங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வருகிறார்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு நள்ளிரவு 12 மணி அளவில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைத்து உணவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது
நேற்று உணவு வைக்கும் போது திடீரென வந்த காவலர் ஒருவர் உணவு வைக்கும் பெண்மணியின் உறவினர் பெண்ணை இங்கெல்லாம் நிற்ககூடாது உணவு வைத்தால் கைது செய்து விடுவோம் என கூறியும் இரவு நேரங்களில் வெளியே வந்தால் இதுபோன்ற harrasment நடைபெற தான் செய்யும் என தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நீங்கள் உணவு இங்கு வைப்பதால் தான் அதிக அளவில் கடற்கரை நாய்கள் அதிக அளவில் சுற்றி தருவதாகவும் ஆனால் இனிமேல் இந்த பகுதிக்கு நீங்கள் வரக்கூடாது என காவலர்கள் எச்சரித்துள்ளனர் மேலும் தற்காப்புக்காக வீடியோ செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு ஒரு மணி நேரமாக செல் போன் தராமல் அலைக்கழித்ததாகவும் அருகில் இருந்த நபர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்
சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உணவளிக்க சென்ற நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் செல்போனை பறித்து கொண்டு பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
