சில்லறை பசங்களை வைத்து அன்புமணி தன்னை அவமானப்படுத்திவிட்டார் என கூறி ராமதாஸ் கண்ணீர் சிந்தியுள்ளார்.

சேலத்தில் பாமக சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ஒருநாள் கனவில் தனது தாயார் வந்ததாக கூறினார். அப்போது பிள்ளையை சரியாக வளர்க்காததால் நீ இப்படி கண்ணீர் சிந்துகிறார் என சொன்னதாக கூறினார். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் கூட ஏன் அன்புமணி இப்படி செய்கிறார் என மருத்துவர்கள் கேட்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி அவரது கையைப்பிடித்து தேற்றினார். இதை பார்த்த பாமக தொண்டர்கள் அழ வேண்டாம், அழ வேண்டாம் என கூச்சலிட்டனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version