யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைய தொடங்கி இருக்கின்றனர்.
எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இந்தநிலையில், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வரிசையில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார், கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு ஃபெலிக்ஸுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
