டெல்லியில் நொடிப்பொழுதில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 12 பேர் இடிபாடுகளில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் ஜனதா மஸ்தூர் காலனி உள்ளது. இங்குள்ள 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 4 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியின் போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் எனக் கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த கட்டட விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
