ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தற்பொழுது இரண்டாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 334 ரன்கள் எடுத்தது.
334 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதானமாக தற்பொழுது விளையாடி வருகிறது. மூன்று விக்கெட்டுகளை மற்றும் இழந்து 243 ரன்கள் எடுத்து சற்று வலுவான நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதோடு ஒரு உலக சாதனையையும் அவர் கைவசப்படுத்தி இருக்கிறார்.

பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை இன்று அவர் தட்டிச் சென்றுள்ளார். 16 இன்னிங்ஸ்களில் 1023 ரன்கள் அவர் மொத்தமாக பகல் இரவு ஆட்டங்களில் அடித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடங்க வேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள போக்கை பார்த்தால் ஆஸ்திரேலிய அணி 400-500 ரன்கள் சுலபமாக எடுத்து விடும் போல் உள்ளது. போட்டியின் போக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
