முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு லோக்ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். தற்போது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக உள்ளார். இதைத் தவிர்த்து 2 நீதித்துறை உறுப்பினர்கள், 2 நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் ஒரு நீதித்துறை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. இந்த உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைப்பது தொடர்பான கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், பேரவைத் தலைவர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர், மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
