Close Menu
    What's Hot

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»கூட்டணி இல்லை என்று பாஜகவுடன் சேர்ந்து விட்டது அதிமுக..” கோவையில் 10 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் – செந்தில் பாலாஜி
    Uncategorized

    கூட்டணி இல்லை என்று பாஜகவுடன் சேர்ந்து விட்டது அதிமுக..” கோவையில் 10 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் – செந்தில் பாலாஜி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthilbalaji8 1658830262
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது :-

    ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற அநீதிகளை எடுத்துச் சொல்லியும், தமிழ்நாட்டிற்கு வழங்கக் கூடிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் மறுத்து வருவதையும், கீழடி உள்ளிட்ட நம்முடைய தொன்மைகளை வெளியிடுவதற்கும், காலம் தாழ்த்துவதும், மறுப்பதும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களுக்கு எதிராக செயல்படுத்தக் கூடிய சூழ்நிலை இந்த நான்கு ஆண்டுகளில், உள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திட்ட சாதனை திட்டங்களை, குறிப்பாக கோவை மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் கோவையில் 10 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்று இருந்தாலும் கூட, 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதல்வரை முன் நின்று கோவை மக்களுக்கு கட்சி திட்டங்களை வழங்கி இருக்கிறார்.

    வீடு வாரியாக வாக்காளர்களை சந்தித்து இதனை எடுத்துச் சொல்லி, ஓரணியில் தமிழ்நாடு என்ற கழகத்தின் முன்னெடுப்பை இல்லம் தோறும் கொண்டு சென்று சேர்ப்பதற்கான பணிகளை, வருகிற 3 ம் தேதி காலை 8:00 மணிக்கு 317 பூத்துகளிலும் பூத் வாரியாக, எங்களுடைய இயக்கங்களை சார்ந்து இருக்கிற பூத்த கமிட்டி அணியினர் வீடு வாரியாக சென்று, முன்னெடுக்க இருக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாட்டினுடைய உரிமைகளை மீட்பதற்கு முதல்வர் எடுக்கக் கூடிய அந்த முன்னெடுப்பு என்பது இந்தியாவில் இருக்கக் கூடிய முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக ஆளுமை மிக்க முதல்வராக விளங்குகிறார்.

    தொடர்ந்து தமிழ்நாட்டில் உரிமைகளை காத்து வருகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடுக்கக் கூடிய முன்னெடுப்புகளை தொடர்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என அனைத்து குடும்பங்களும் இணைய வேண்டும். நம் மீது தாக்கக் கூடிய இந்த தாக்குதல்களை எதிர்த்து நிற்க வேண்டும். எதிர்த்து நின்று நம்முடைய உரிமைகளை கேட்டு பெற வேண்டும். இந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முனைப்பை முதல்வர் என்று தொடங்கி வைத்து இருக்கிறார் என்றார்,

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு நிதி தராமல் சென்றாலும் கூட முதல்வர், தன்னுடைய அயராது உழைப்பால் இந்தியாவினுடைய அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்று வரலாற்று சிறப்புமிக்க ஒன்றை உருவாக்கி தந்து இருக்கிறார்.

    எனவே முதலமைச்சருடைய வழியில் அவரின் உத்தரவின் அடிப்படையில் கோவையின் மூன்று மாவட்டத்தில், பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. குறைந்த லட்சம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை நிர்ணயித்து, களத்தில் இறங்கி நிறைவு செய்து ஒப்படைக்க இருக்கிறோம் என்று கூறினார்.

    TVK அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்ததாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,

    நாங்கள் களத்திற்கு சென்ற வரையில் அது போன்ற சூழல்கள் இல்லை, முழுக்க, முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பிக்கை வைத்து மகளிர் தொடங்கி, குழந்தைகள் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் உள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், இப்படி சாதனை திட்டங்கள் முதல்வர் கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே இளைஞர்கள் எங்களோடு தான் இருக்கிறார்கள்.

    மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களை உடனடியாக துணை முதல்வரை சந்திக்க வைக்கிறார்கள் என்ற பேச்சு குறித்த கேள்விக்கு, துணை முதல்வர் யார் சென்றாலும் அவர்களை சந்திப்பார். சமூக வலைதளங்களில் பரவும் விஷயங்களை கேட்டுக் கொண்டு பேசக் கூடாது. புதிதாக வந்தவர்கள் பழையதாக வந்தவர்கள் என நாங்கள் யாரையும் தவிர்ப்பது இல்லை. நாங்கள் அனைவரையும் சந்திக்கிறோம் அதே போல தான் துணை முதல்வர் அனைவரையும் சந்திக்கிறார்.

    கடந்த முறை 10 தொகுதிகளில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அந்த பத்து தொகுதிகளும் வெற்றி பெற்று முதல்வருக்கு சமர்ப்பிப்போம். கோவை மக்களும் மகத்தான வெற்றியை வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்.

    நீட் தேர்வு குறித்த கேள்விக்கு,

    நீட் தேர்வு என்பது மக்கள் வேண்டாம் எனக் கூறும் கருத்து. அது அரசாங்கம் மக்கள் மற்றும் மாணவர்களின் கருத்தும் கூட. அப்பொழுது அந்த கருத்துக்களை நாம் முன்வைக்கும் பொழுது இதற்கும், அதற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. இதில் ஒன்றிய அரசு செய்ய மறுக்கும் போது தி.மு.க அதை கேள்வியாக முன்வைக்கிறது.

    மத்திய அரசு சமையல் எரிவாய்க்கு மானியம் கொடுக்கிறேன் என கூறினார்கள், ஆனால் தற்போது மானியம் வருகிறதா ?. தேர்தல் வரை கொடுக்கப்பட்டது தேர்தலுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. அப்படி தி.மு.க அரசு ஏதாவது திட்டத்தை நிறுத்தியதா ??.. மகளிர் உரிமை தொகை விடுபட்டு இருக்கிறது என சில மகளிர் கோரிக்கை வைத்தார்கள். அதையும் சேர்க்க சொல்லி உத்தரவிட்டார் முதல்வர்.

    தூத்துக்குடி சம்பவம் குறித்த கேள்விக்கு,

    சட்டமன்றத்தில் முதல்வர், யார்? யார் ? மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். தி.மு.க வால் தமிழகத்தின் உரிமைகள் பறி போய் விட்டதாக ஏழாம் தேதி அ.தி.மு.க சார்பில் எடப்பாடி தலைமையில் கோவையில் சுற்றுப் பயணம் தொடங்குவது குறித்தான கேள்விக்கு,
    முதலில் என்ன பறிபோனது என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமை என்ன பறிபோனது என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தொடங்கிச் சென்ற திட்டங்களையும் கூட தொடர்ந்து நாங்கள் செய்து முடித்து இருக்கிறோம். தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

    அ.தி.மு.க ஆட்சியில் பறிபோனதை தி.மு.க முதல்வர் மீட்டுக்கு கொண்டு இருக்கிறார். நாங்கள் யாரோடும் கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொடியில் யானை சின்னத்திற்கு தடைகோரிய மனு.. நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவு..
    Next Article கொலைநகரமாக மாறும் ஆன்மீக நகரம் திருவண்ணாமலை..
    Editor TN Talks

    Related Posts

    சிகரெட்டுகளுக்கு கலால் வரி உயர்வு!. பிப்.1 முதல் விலை உயரும்!. மத்திய அரசு அதிரடி!.

    January 1, 2026

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    December 30, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    Trending Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    February 20, 2026

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    February 20, 2026

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.