Close Menu
    What's Hot

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனல் பறக்கும் விவாதங்களுக்கு வாய்ப்பு!
    Uncategorized

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனல் பறக்கும் விவாதங்களுக்கு வாய்ப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியா – பாகிஸ்தான் சண்டை, அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் செய்ததாகக் கூறியது, மற்றும் பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    ‘இந்தியா’ கூட்டணி இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று கணிக்கப்படுகிறது.

    வழக்கமாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் முன்னரும் அரசியல் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், 24 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கோரிக்கைகள்:

    நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகளாக எட்டு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. அவை:

    பகல்காம் தாக்குதல்

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா – பாகிஸ்தான் சண்டையை டிரம்ப் நிறுத்தியதாகக் கூறியது

    உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழு பயணம்

    பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்

    ஆளும் கட்சியின் வியூகம்:

    ஆளுங்கட்சியான பா.ஜனதா தரப்பிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மூத்த மத்திய அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்த வியூகங்கள் வகுக்கப்பட்டன. அனைத்துப் பிரச்சனைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழைக்கால கூட்டத்தொடர், பல்வேறு முக்கிய தேசிய மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Bihar Elections BJP India Alliance India-Pakistan Monsoon Session Operation Sindhur Pahalgam Attack Parliament politics Trump அரசியல் ஆபரேஷன் சிந்தூர் இந்தியா கூட்டணி இந்தியா-பாகிஸ்தான் டிரம்ப் நாடாளுமன்றம் பகல்காம் தாக்குதல் பாஜக பீகார் தேர்தல் மழைக்கால கூட்டத்தொடர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலத்தில் இன்று தவெக முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்… பங்கேற்பாரா விஜய்!
    Next Article ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமானத்தில் கோளாறு… அவசரமாக தரையிறக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது!. நயினார் நாகேந்திரன் தாக்கு!.

    December 20, 2025

    பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்!. யார் இந்த நிதின் நபின் சின்ஹா?.

    December 14, 2025

    U-19 ஆசிய கோப்பை!. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!. அரையிறுதிக்குள் நுழைந்து அபாரம்!

    December 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    உஷார்!. அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா?. மூளைக்கு 5 மடங்கு பாதிப்பு!.

    Trending Posts

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.