உபர் நிறுவனமும், ரோபோடேக்ஸிஸ் மற்றும் ரோபோபஸ்கள் போன்ற சுய-ஓட்டுநர் வாகனங்களை உருவாக்கி பயன்படுத்தும் தன்னியக்க ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வி ரைட் ( We Ride) நிறுவனமும் இணைந்து சவுதி அரேபியாவில் ரோபோ டேக்ஸி கொண்டு வந்துள்ளது. இந்த ரோபோ டேக்ஸியில் ஓட்டுனர் இல்லாமல் தானாகவே நிர்ணயத்த இலக்கை சென்றடையும். முழுக்க முழுக்க ரோபோடெக்னாலஜி சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ டேக்ஸி தற்பொழுது சவுதி அரேபியாவில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இந்த ரோபோ டேக்ஸியில் 20 சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உள்ளன. தற்பொழுது சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ரோபோ டேக்ஸிகள் அனைத்தும் WeRide நிறுவனத்தின் GXR மாடல் (Geely இன் Farizon SuperVan ஐ அடிப்படையாகக் கொண்டது). இந்த ரோபோ டேக்ஸியில் ஐந்து பேர் வரை பயணிக்கலாம். ஆரம்பத்தில், இந்த ரோபோ டேக்ஸிகள் அபுதாபியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான யாஸ் தீவின் 12 சதுர மைல் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இயங்கப் போகிறது.

பின்னர் இந்த ரோப டேக்ஸிகள் கொஞ்சம் கொஞ்சமாக சவுதி அரேபியாவில் உள்ள அடுத்தடுத்து நகரத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளுக்கு தனது பணியை தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

We Ride நிறுவனமும் uber நிறுவனமும் இணைந்து வரும் காலத்தில் 15 நாடுகளில் இந்த ரோபோ டேக்ஸிகளை கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளில் இந்த ரோபோ ரோபோ டேக்ஸி சேவை அடுத்தடுத்த ஆண்டுகளில் அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
