Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காதல், கவிதையுடன் போட்டோ சூட்… வெளியான புகைப்படங்கள்…
    Featured

    காதல், கவிதையுடன் போட்டோ சூட்… வெளியான புகைப்படங்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025Updated:May 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 26 at 9.50.47 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொதுவெளியில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் அவர்களது வரிகள் அந்த அளவு ஆழமாக மக்களால் ரசிக்கப்பட வேண்டும். வைரமுத்து, வாலி, கார்க்கி, தாமரை, நா.முத்துக்குமார் போன்றவர்களுக்கு ஈடாக தமிழ் சினிமாவில் ஒரு கவிஞர் இருக்கிறார் என்றால் அது சினேகன். ’பாண்டவர் பூமி’ படத்தில் இடம் பெற்ற ”அவரவர் வாழ்க்கையில், தோழா, தோழா” போன்ற பாடல்கள் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் சினேகன்.

    WhatsApp Image 2025 05 26 at 9.50.47 AM 1 scaled

    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது பாடல்களும் பிரலமடைந்தது. பிறகு நடிகராகவும் களத்தில் இறங்கினார் சினேகன். உலக நாயகன் கமலஹாசன் மீது தீரா பற்று கொண்டிருக்கும் இவர், கமல் கட்சி தொடங்கிய போது, அதில் தன்னையும் இணைத்து கொண்டு தேர்தலிலும் போட்டியிட்டார் சினேகன். தற்போது கமல் திமுகவில் ஐக்கியமாகி விட தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார் சினேகன்.

    WhatsApp Image 2025 05 26 at 9.50.47 AM scaled

    திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், தற்போது ஒரு சீரியலில் கதாநாயகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது 8 வருட காதலியான சின்னத்திரை நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார் சினேகன். உலக நாயகன் கமல்ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது காதலை பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் வைரலாகி வந்தது.

    WhatsApp Image 2025 05 26 at 9.50.48 AM 2 scaled

    3 வருடங்களுக்கு பிறகு இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் காதல், கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா – சினேகன் தம்பதி குழந்தைகளின் முகங்களை பொதுவெளியில் மறைத்து வந்தனர்.

    WhatsApp Image 2025 05 26 at 9.50.47 AM 2 scaled

    இந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து குடும்பத்துடன் ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் குழந்தைகளை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளனர் இந்த தம்பதி. சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களை பதிவிட்டுள்ள சினேகன் -கன்னிகா, ”எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு.. எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்..” என பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை மதுபானக் கடையில் ரகளை… ஒருவர் உயிரிழப்பு!
    Next Article இடுக்கி சுற்றுலா தலங்கள் மூடல்… ரெட் அலர்ட் எதிரொலி!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.