Close Menu
    What's Hot

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»கோயிலுக்குள் நுழைவதை சாதியின் பேரால் தடுத்தால்… .
    Uncategorized

    கோயிலுக்குள் நுழைவதை சாதியின் பேரால் தடுத்தால்… .

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டதாகவும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ஜூலை 16ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது எனக் கூறி, புதுக்குடி அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

    மேலும், கோவிலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொண்டு நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி.. தம்பதி கைது..
    Next Article தவெக மதுரை மாநாட்டுக்கு அனுமதி கோரி மனு..
    Editor TN Talks

    Related Posts

    சிகரெட்டுகளுக்கு கலால் வரி உயர்வு!. பிப்.1 முதல் விலை உயரும்!. மத்திய அரசு அதிரடி!.

    January 1, 2026

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    December 30, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    Trending Posts

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    February 17, 2026

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.