Author: Editor TN Talks
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மையம் கொண்ட ‘டித்வா’ புயல் இலங்கையில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கனமழையால் இலங்கையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், ‘டித்வா’ புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கைக்கு…
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார். ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு’ பயணம் என்ற பேரில் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். ஜூலை 25 ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் நவம்பர் 9 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நிறைவடைந்தது. இந்த பயணத்தில் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார். நடைபயணத்தின் மூலம் கிடைத்த அனுபவங்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவர், “என்னுடைய 28 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்த 108 நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் நடைபயணத்தின் மூலமாக நான் சுட்டிக்காட்டிய சில பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திருக்கிறது. மற்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதற்கு தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறேன். பலகட்ட…
காலையில் ஒரு கப் சூடான காபி அல்லது டீயுடன் நாளைத் தொடங்குவது பலருக்கும் ஒரு தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. தூங்கி எழுந்ததும் சூடான காபி, டீ குடித்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சி, அன்றைய நாளுக்கான ஆற்றலையும் உற்சாகத்தையும் தருவதாக பலர் நம்புகின்றனர். இந்த பழக்கம் இங்குக் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டாலும், வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதால் உடலுக்கு நன்மைக்கு பதிலாகத் தீமைகளே அதிகம் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். டீயில் உள்ள காஃபின், டானின்கள் மற்றும் பிற கூறுகள் வெறும் வயிற்றில் இரைப்பையில் அமிலச் சுரப்பைத் தூண்டி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்கிறது ஆய்வு. அந்த வகையில், பலரது அன்றாட வழக்கமாக இருக்கும் இந்த பழக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சமநிலையின்மை: காலை எழுந்ததும், குறிப்பாக வெறும் வயிற்றில் டீ குடிப்பது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். 2017ம் ஆண்டு வெளியான NCBI இதழில் வெளியான ஆய்வின்படி, டீயில்…
8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற இந்தி நடிகை தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தீபகா படுகோன், படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிவேன் என்று கூறியது இணையத்தில் தகவலாக வெளியானது. இது குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது தீபிகா படுகோன் கருத்து குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “காலை 9மணி முதல், மாலை 6 மணி வரை படப்பிடிப்பிலும், காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 2 மணி வரை படப்பிடிப்பு என இரண்டிலும் கலந்து கொண்டுள்ளேன். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராகி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று மேக்கப் போட்டு தயாராக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கி, மாலை 6…
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்காமல் இருந்ததால் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையினை ஜீ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது. இந்த இரண்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டதால், ஜனவரி 23-ம் தேதி படம் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்த தேதியில் ‘கருப்பு’ வெளியானால் மட்டுமே, மே மாதத்தில் வெங்கி அட்லுரி படத்தினை வெளியிட முடியும் என்ற முனைப்பில் இருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். ஏனென்றால் வெங்கி அட்லுரி படத்தினையும் ஓடிடி உரிமையினையும் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கிறது. விரைவில் ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என அறிவித்து, விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த முடிவு…
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.…
டித்வா புயல் காரணமாக நாளை அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டித்வா புயல் வடதமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது. இதனால் நாளை மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு உத்தரவை மீறி நாளை பள்ளி – கல்லூரிகளை திறக்கக் கூடாது, அப்படி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
டித்வா புயல் தொடர்பாக தமிழக மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நேற்று (27-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டித்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2025) காலை 0830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ஆம் தேதி…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாள்கள், அதி கனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நேற்று (27-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டித்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2025) காலை 0830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய…
‘ட்யூட்’ படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று முன் தினம் இந்த வழக்கில் ஆஜரான இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலுக்கான உரிமை இளையராஜாவிடம் உள்ளது. அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி் இன்றைக்கு ஒத்திவைத்த நிலையில், இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், இளையராஜா பாடல்களின்…