Author: Editor TN Talks
குளிர்காலம் என்றாலே மாலை நேரத்தில் சுட சுட டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது சகஜம் தான். அந்த ஆசையை நிறைவேற்ற வீட்டில் வடை, பஜ்ஜி, சிப்ஸ் என செய்து சாப்பிடுவதும் வழக்கம் தான். ஆனால், எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு முறை இந்த மைசூர் போண்டாவை செய்து பாருங்கள். வடை, பஜ்ஜியை போல் செய்வதற்கு சுலபமாக இருக்கும் இந்த போண்டா, சாப்பிடுவதற்கு வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும். காரசாரமான சட்னியுடன் இந்த போண்டாவை தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். அப்புறம் என்ன யோசனை? மைசூர் போண்டாவின் சுவையை அனுபவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை பின்பற்றி ஒரு முறை செய்து பாருங்க. மைசூர் போண்டா செய்ய தேவையான பொருட்கள்: புளித்த மோர் – 1கப் மைதா – 1 கப் அரிசி மாவு – 1/4 கப் வெங்காயம் – 1/4 கப் துருவிய…
தமிழ் சமூகத்தில், ஒரு பெண் பூப்பெய்துவது என்பது பெரும் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது. ‘பூப்புனித நீராட்டு விழா’ போன்ற சடங்குகள் மூலம், பெண் தன்மையை வரவேற்கும் அதே வேளையில், முன்கூட்டிய பருவமடைதல் (Early puberty) இளம் பெண்கள் எதிர்கொள்ளும் நிஜமான மன, சமூக சவால்களை நாம் கவனிக்க தவறுகிறோம். முன்கூட்டிய பருவமடைதல் என்பது பெண்களில் 8 வயதுக்கு முன்பு பருவமடைதல் ஏற்படுவதை குறிக்கிறது. சராசரி வயதிற்கு முன்னதாகவே உடல்ரீதியாக பருவமடையும் ஒரு சிறுமி, சமூகத்தின் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகளவில் ஈர்க்கிறாள். அவள் இன்னும் ஒரு சிறுமியாக இருந்தாலும், ‘வயதிற்கு வந்த பெண்’ என்ற முத்திரை காரணமாக சமூகம் அவளிடம் வயதுக்கு மீறிய ஒழுக்கத்தையும், பொறுப்புகளையும் எதிர்பார்க்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இந்திய பெண்களில் கிட்டத்தட்ட 34% பேர் 8 வயதிற்கு முன்பே பருவமடைவதற்கான அறிகுறிகளை கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. மற்றொரு ஆய்வில், கிராமப்புறங்களை விட (8.43%) நகர்ப்புறங்களில் (12.35%) இது அதிகமாக நிகழ்வதாக…
மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத் தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உடன் பிறந்தவர்கள் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. மிதுனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டிகள் விலகும். பங்குதாரரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நன்மை பயக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு நடத்தி அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி…
“ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்… ஒரு படி நிச்சயம்” என்று 1967-ல் அண்ணா சொன்னார். 1967 தேர்தலில் நடந்த மாற்றம் இந்தத் தேர்தலிலும் நடக்கப் போகிறது என்று சொல்லும் விஜய், “எல்லோருக்கும் நிரந்தரமான ஒரு வீடு… வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், கார் என்பது லட்சியம்… அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கு வோம்” என்று அண்ணாவின் பூமியில் நின்று முழங்கியிருக்கிறார். இதன் மூலம் விஜய்யும் தனது தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி கரமான ‘இலவச’ அறிவிப்புகளை வெளியிட தயாராவதை உணரமுடிகிறது. இலவசங்கள் என்பது 1971-76ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக தரம் உயர்த்திய எம்ஜிஆர், நோட்டுப் புத்தகங்களையும் இலவசமாக வழங்கினார். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களின் திருமண உதவி திட்டத்தில் தாலிக்கு தங்கம் சேர்த்தது, பணிக்குச் செல்லும்…
தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மணலை அள்ளிச் செல்லலாம், எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னதை தமிழக மக்கள். மறந்திருக்க மாட்டார்கள். 2024 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை மேற்கொண்ட ஆய்வில் 28 குவாரிகளில் 987 எக்டேர் பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு இருந்ததும், அதன் மதிப்பு 4,730 கோடி ரூபாய் என்றும்…
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவரது காதலரும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனையான 29 வயதான ஸ்மிருதி மந்தனா பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஐசிசி உலகக் கோப்பையை வென்ற நிலையில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை வீடியோவாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ஸ்மிருதி மந்தனா. இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலி மாவட்டத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென ஸ்மிருதி மந்தனாவின் தந்தை னிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை தள்ளிவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர். இந்த…
தொடர் கன மழையால், நெய் வேலி என்எல்சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளன. நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகிய மூன்று திறந்த வெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. என்எல்சி சுரங்கங்கள் உள்ள பகுதியிலும் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. சுரங்கங்களின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பு இல்லை. சுரங்கங்களில் தேங்கியுள்ள உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் என்எல்சி ஊழியர்கள்…
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்தியாவில் பல மாநிலங்கள் சமூக நீதியை பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மட்டும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருகிறது. சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சமூக நீதியை சிதைத்து, படுகொலை செய்யும் முயற்சிகளில் ஸ்டாலின் அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை நடப்பு பத்தாண்டின் முதல் பாதி சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கும் வகையில் பல மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. 2021ம் ஆண்டுக்குப் பிறகு தான் பிஹார், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில்…
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- “திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நம்முடைய…