Author: Editor TN Talks
குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கு, கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை பெற்றது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர்…
இன்று இந்தியா மற்றும் உலக அளவில் பேஸ்புக், x ( முன்னாள் ட்விட்டர் செயலி ), சேட் ஜி பி டி, டெலிகிராம் மற்றும் பல்வேறு வலைதளங்கள் சரியாக செயல்படாமல் முடங்கி போய் உள்ளது.மேற்கூறிய செயலி மற்றும் வலைதளங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கணக்கை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான க்ளவுட் ஃபேர் நிறுவனம் கிராஷ் ஆனதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் ஃபேர் நிறுவனம் உள்ளடக்க விநியோக வலையமைப்பு செய்வதில் தேர்ந்த நிறுவனம். அதாவது செயலிகள் மற்றும் வலைதளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைய உள்ளடக்கத்தை (படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை ) விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கிளவுட் ஃபேர் நிறுவனம் சைபர் செக்யூரிட்டி சேவையிலும் கை தேர்ந்த நிறுவனம். இன்று பல்வேறு…
நாமக்கல் மாவட்டம் பார்சனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மணி மூன்றாவது முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உடல் திறன் கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில் 16 -வது உலக ஆணழகன் போட்டி இந்தோனேஷியாவில் கடந்த 11 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் தலைமையில் 75 பேர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்திய ஆண்கள் அணியினர் 715 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர், பெண்கள் அணியினர் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் பார்சனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மணி என்பவர் இந்த முறையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சாம்பியன் ஆப் சாம்பியன்…
ஆந்திர மாநிலம் மாரேடுமில்லி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதிகளிலும், சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் உலவி வருவதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் உயர்மட்ட தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான மத்வி ஹித்மாவும் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மாரேடுமில்லி பகுதியை பாதுகாப்புப் படையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர். ஆந்திராவைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலும் என்கவுண்டர் நடந்தது. இன்று…
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ( நவம்பர் 15, 2025 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 27 கோடி ரூபாய் பொருட்செலவில் பெயர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக ராமஜிராவோ ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. படத்திற்கு வாரணாசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி என்கிற படத்தலைப்பை 3 நிமிடம் 41 நொடி அடங்கிய வீடியோ மூலம் 130 அடி உயர எல்ஈடி திரையில் படக்குழு திரையிட்டது. பட தலைப்பின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக சிறு தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டதன் வாயிலாக காலதாமதம் நடந்தது. இதனால் சற்று விரக்தியில் எஸ்எஸ் ராஜமௌலி மேடையில் ஏறி பட தலைப்பின் வீடியோவை காண காத்திருந்த அனைத்து ரசிகர்கள் மத்தியில் மன்னிப்பு…
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில், ’உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சி குறித்த பொதுமக்களின் மனநிலை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தி…
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி. திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்த்து வருவாய்த் துறையினர் தமிழகத்தில் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக அரசு தான் வருவாய்த் துறையினரை தூண்டிவிட்டுள்ளது. வருவாய்த் துறையினர் அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை திமுக அரசு அடித்து மிரட்டியது. இப்போது அவர்களுக்கு சோறு கொடுக்கிறார்கள். சோறு கொடுத்தால் மட்டும் போதுமா?. பாஜகவும் விஜய்யும் கூட்டு…
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி,2024-2025 ஆம் ஆண்டில் 4.81 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நெல் கொள்முதல், நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில், குறுவை (கரீஃப்) பருவ நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிலவரப்படி, நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் மொத்தம் 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,86,674 விவசாயிகளிடமிருந்து மொத்தம் 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.3,559 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்…
நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தாயாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும், இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த…
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சட்டங்களின்படி, வரும் டிசம்பர் 21, 2025-க்குள் கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் என 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம் 23,612 வார்டுகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு கேரள மாநில தேர்தல் ஆணையம், டிச.9 மற்றும் 11 ஆகிய…