Author: Editor TN Talks
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர், தாக்குதலுக்கு முன்பாக பேசி பதிவு செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சிக்னலில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பரபரப்பான மாலை நேரத்தில் நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளநிலையில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். கார் வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தி உள்ள தேசிய புலனாய்வு முகமை, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா, உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகம்…
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் திரைத்திறை பங்களிப்புக்காக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட் சினிமாவில் தனது தனித்துவமான சண்டைக் காட்சிகள் மற்றும் நடிப்பால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் டாம் குரூஸ். நாம் பார்க்கும் சண்டைக் காட்சி உண்மையில் தத்ரூப வடிவமா அல்லது கிராபிக்ஸ் வடிவமா என யோசிக்கும் அளவிற்கு எந்தவித டூப்பும் இல்லாமல் தனது உயிரை பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டும் கெட்டிக்காரர் டாம் குரூஸ். நடிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாள் கனவாக ஆஸ்கார் விருது பெறும் எண்ணம் இருக்கும். அந்தவகையில் 63 வயதான டாம் குரூஸின் பெயர் இதுவரை 4 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும், சில காரணங்களால் விருதை பெற முடியாமல் போயுள்ளது. ‘பார்ன் ஆன் தி போர்த்’ ‘ஆப் ஜூலை’ மற்றும் ‘ஜெரி மகுயர்’ ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், ‘மேக்னோலியா’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், ‘டாப் கன்:மாவெரிக்’…
சென்னையில் இன்று (நவ. 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி காலங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலையின் உச்சமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டநிலையில், விலை சரிவடையத் தொடங்கியது. தங்கம் ஒரு சவரன் கடந்த மாதம் 28ம் தேதி ரூ.89,000-க்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,73,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், தங்கம் விலை இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம்…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக கோயில் சந்நிதானத்தில் உள்ள கருவறைக் கதவுகள், துவார பாலகர்களின் சிலைகள் ஆகியவற்றில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்தனர். கடந்த 2019ல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கத் தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, சுமார் 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் இருவர், பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே மாயமான தங்கத்தின் அளவை கண்டுபிடிக்க தங்க கவசங்களில் அறிவியல் பூர்வமான ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து,…
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (நவ. 19) கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (நவ. 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (நவ. 19) பிற்பகல் 1.30 மணிக்கு கோவை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மாநாட்டை துவக்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கோவை விமானநிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று (நவ. 18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளநிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி உருவாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி முதல் மதுரை வரை 10 நாள் மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தின்போது, திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஜன.2 முதல் 12-ம் தேதி வரை 180 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மது,போதைப்பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளரவேண்டும். மது, போதையை ஒழிக்க அரசு, காவல் துறை…
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார். இந்தியில் ‘உண்டேகி'(Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் அவர். அபேக்ஷா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி நேற்று அதிகாலை காலமானார். புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார். இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களை உருவாக்குவதில் பங்காற்றியவர். பல இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி வழங்கியுள்ளார் கே. எஸ். நாராயணசாமி. இயக்குநர் கே. பாலச்சந்தர் திரைப்படப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் இவரே. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கே. எஸ். நாராயணசாமியின் உடலுக்கு நேரில் சென்று…
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்து பணிகளையும் இன்று முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்தப்படுகிறது. இதை சரிசெய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை கஷ்டப்படுத்துகின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி…