Author: Editor TN Talks
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவியும், அவரது நண்பர் ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான இளைஞரும், பீளமேடு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் உள்ள காலி இடத்துக்குச் சென்று காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர், இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை அருகிலுள்ள புதருக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர். மயக்கம் தெளிந்து எழுந்த இளைஞர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சில மணி நேரம் தேடி மாணவியை மீட்டு, இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இளைஞர்…
த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர். பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள ‘போர் பாயின்ட் ஷெரட்டன்’ தனியார் விடுதியில், இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,400க்கும் மேற்பட்டவர்களுக்கு, வாகன பாஸ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. தொண்டர்கள் ஆர்வ கோளாறில், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களில் வந்து குவியாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை த.வெ.க.,…
12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3,317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 08.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11.03.2026 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.…
தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்களிக்க தகுதியானவர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், ஒன்றிற்கு மேற்பட்ட முகவரியில் வாக்களிக்கும் போலி வாக்காளர்களை களைவதற்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதாவது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் படிவங்களை பொதுமக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களால் நடத்தப்படுகிறது. சென்னையில் ஆர்.கே.நகர்,…
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் 3 பேரும் துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்திபோது சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு…
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருத்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து பைக் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணத்தில் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரும் துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து…
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”இந்தியாவிற்கு என்ன ஒரு மகிமையான தருணம்! எங்கள் நீல நிற பெண்கள் தைரியம், கருணை மற்றும் சக்தியை மறுவரையறை செய்து, வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் அச்சமற்ற, உடைக்க முடியாத மனப்பான்மையுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கொடூர கூட்டு வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்றிரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். புகாரைத்…
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்றிரவு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று கொண்ட கும்பல் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி விட்டு கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஆண் நண்பர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு பீளமேடு போலீசார் விரைந்தனர். அப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் காரில் இருந்து மாணவியின் துப்பட்டா,…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே இதில் பங்கிருக்கிறது என நடிகர் அஜித்குமார் பேசியுள்ளார். நடிப்பை தாண்டி கார் ரேஸிங்கில் பங்கேற்றுவரும் அஜித், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பேசிய அஜித் “கரூர் கூட்ட நெரிசலுக்கு அனைவருக்குமே பங்கிருக்கிறது” என்று குறிப்பிட்டார். அதாவது, “கரூர் கூட்ட நெரிசல் பிரச்னைக்கு அந்த ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு கிடையாது. நாம் அனைவருமே பொறுப்புதான். முக்கியமாக ஊடகங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. கூட்டத்தைக் கூட்டி செல்வாக்கைக் காட்டும் ஒரு சமுதாயமாக நாம் மாறிவிட்டோம் இது போன்ற சம்பவங்கள் ஏன் ஒரு கிரிக்கெட் போட்டியில் நடப்பதில்லை? ஆனால் திரையரங்குகளில் நடக்கிறது. பிரபலங்கள், திரைத்துறையினர் கலந்துகொள்ளும் இடங்களில் மட்டும் ஏன் நடக்கிறது. இது திரைத்துறை மீதே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். கரூர் அந்த ஒரு தனி நபருடைய தவறல்ல. நான் உள்பட நாம்…