Author: Editor TN Talks

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்ஜிஆர் உடன் பயணித்து உறுப்பினராக மட்டுமில்லாமல் செயல் வீரராக பணியாற்றினேன், அடுத்ததாக அம்மா வழியில் இரவு பகலாக அர்ப்பணித்து பணியாற்றினேன். இயக்கம் வலுவாக இருக்க அயராமல் எல்லாருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அம்மாவின் மறைவிற்கு பிறகு இயக்கம் உடைய கூடாது என இரு முறை வாய்ப்பு வந்த போதிலும் விட்டுக்கொடுத்தேன். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி என்னை நீக்கி இருக்கிறார். பல்வேறு சூழலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எம்ஜிஆர் வரலாறு பார்த்தால்  தோல்வியே கண்டதில்லை, புரட்சித் தலைவி ஒரு முறை தோல்வி கண்டாலும் பின்னர் வராலாற்று வெற்றி படைத்தார். ஒரு இயக்கம் என்பது பல கோடி தொண்டர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும், அனைவரையும் ஒருங்கிணைத்தால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் எண்ணம்,  எல்லாரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக சசிக்கலா…

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டு மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் அவற்றை நிறைவேற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வபெருந்தகை, திமுகவின் B டீம் ஆக செங்கோட்டையன் செயல்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை, அதில் தலையிட விரும்பவில்லை. இருந்தாலும் திமுகவின் பி.டீம் என சொல்லி இருப்பதால் பேச விரும்புகிறேன். தமிழ்நாட்டை காட்டிக் கொடுக்காத பி.டீமாக இருந்தால் பரவாயில்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்யாத டீமாக இருந்தால் பரவாயில்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துகொண்டு B டீமாக யார் யார் இருக்கிறார்களோ. டெல்லியில் இருப்பவர்களுக்கு யார் காவடி தூக்குகிறார்கள்,…

Read More

பிரதமர் மோடி தமிழர்கர்களை தொடர்ந்தி இழிவுப்படுத்தி பேசி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது. தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்…

Read More

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக தனி விமான மூலம் பசும்பொன் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவரின் நினைவிடத்தை பார்வையிட்ட பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதிக்கான தலைவர் அல்ல, அவர் ஒரு பற்றற்ற பண்பாளர்” என பேசினார்.  தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்த வருகை தருவதாகவும், துணை குடியரசு தலைவராக பதவியேற்ற பின் தமிழகம் வரும் முதல் நிகழ்வு என்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார். மேலும் தேவருடைய விழா மட்டுமல்லாது அனைத்து தியாகிகளின் விழாக்களையும் அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார்…

Read More

தவெக பொதுக்குழு கூட்டம் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுவதாக அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று…

Read More

போதை பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா ஆஜர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார். கடந்த சில மாதங்களுக்கி முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் கிருஷ்ணா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வந்த கிருஷ்ணா கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக நுங்கம்பாக்கம்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் கிருஷ்ணா ஆஜரானார். இதேபோல் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த புகாரில் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

Read More

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் 3000 பேருக்கு மாமல்லபுரத்தில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 100 வாக்காளர்களுக்கு ஒரு திமுக நிர்வாகி என்ற அடிப்படையில் 6 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 68 ஆயிரம் வாக்கு சாவடிகளையும் வெல்வதே இலக்கு என்றும் பயிற்சிக் கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம்! உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல…

Read More

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுபெற்றது. மோன்தா என பெயரிடப்பட்ட புயல் தீவிர புயலாக வலுபெற்றதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து, மாநகராட்சிக்குட்பட்ட கல்வாய்களில் நீர்மட்டம், ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணை முதல்வரின் ஆய்வின்போது,…

Read More

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி திடீரென வேகம் எடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தீவிர புயலாக மாறியதை தொடர்ந்து காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிற்பகல் நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் இருந்து 18கி.மீ. வேகத்தில் உயர்ந்துள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடப்பதையொட்டி இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை  ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு…

Read More

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இரண்டாவது முறையாக முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே கரூர் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read More