Author: Editor TN Talks

வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த பகுதியாக வலுபெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்ட இந்த புயல் 3மணி நேரத்திற்கு மேலாக மணிக்கு 16கி.மீ. வேகத்தில் நகர்ந்து. <span;>காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. <span;>தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது. இது <span;>அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை தீவிர புயலாக உருவெடுத்து ஆந்திராவின் மசிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே…

Read More

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கரூரில் நடந்த  தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்த விஜய், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று காலை 10 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கரூர் மக்களை சந்தித்து விஜய் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனித்தனியே சந்தித்து பேசும் விஜய்,  அவர்களுடைய தேவைகள் என்னென்ன என்பது குறித்து விஜய்யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிிகளை தவெக செய்து கொடுக்கும் என்று விஜய் நேரடியாக உறுதியளித்துள்ளார்.…

Read More

வரும் 27 ம் தேதி வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த பகுதியாக வலுபெற்றது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் மேலும் வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 27ம் தேதி புதிய புயல் உருவாகும் என்றும் அதற்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆயவு மையம் தெரிவிதது. இந்த சூழலில் 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதகவும், இன்று தமிழகத்தில்…

Read More

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு, அது தள்ளி போனது. இந்த நிலையில் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் சென்னையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More

மழைக்கால கூட்டத்தொடருக்கான சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மறைந்த கேரள முதலமைச்சர் பிஎஸ் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன் இறந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது நாள் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்…

Read More

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுரணர்கள் சோதனையிட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான ஐடி வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரடல் விடப்பட்டது. இதை தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 11ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரடல் விடடப்பட்டது. நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு செல்போன்…

Read More

சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்றிலிருந்து 17ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் கூடுதல் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்தும், கேள்விகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய முதல் நாள் கூட்டத்தில் கரூர் துயரத்தில் இறந்த 41 பேருக்கும், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இன்றுடன் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டனர். பேரவை தொடங்குவதற்கு முன்னதாக சட்டமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அதிமுக அறையில் எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவையில் அடுத்த மூன்று நாட்களிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கை…

Read More

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், கரூர் துயரத்தில் உயிரிழந்த 42 பேருக்கும் இரங்கல் அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பின்னர், கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளார் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் கூறி தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் இன்றைய கூட்டம் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நாளை 2025-2026ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவையில் அறிவிக்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளும் கூட்டம் தொடங்கியதும்…

Read More

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நீதி வெல்லும்’ என தவெக தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக…

Read More

ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன்.என்நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த 3 துறைகளில் கீழ்…

Read More