Author: Editor TN Talks

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், மற்றும் சி.டி.குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.…

Read More

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கட்சியின் மக்கள் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் இருந்து மத்திய அரசு அனுப்பி வைத்த அமைச்சர்கள், எம்பிகள் அடங்கிய குழு, விசாரணை மேற்கொண்டனர். இதேநேரம் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையும் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில் கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அதில் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தேசிய ஜனநாயக…

Read More

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இரு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். கரூர் வேலாயுதபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. விஜய்க்கும், தவெக கட்சிக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை ஆவணங்களை உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாருக்கு…

Read More

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்து வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “ இந்திய சினிமாவை உலகளவில் விளம்பரப்படுத்தும் ஒரு தளமாக ஸ்போர்ட்ஸை பயன்படுத்த நினைக்கிறேன். 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளுடன் உலகிலேயே மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர்களாக நாம் இருக்குகிறோம். விளையாட்டும், சினிமாவும் மக்கள் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை விளம்பரப்படுத்த, இந்தியன் சினிமா என்ற லோகோவை உருவாக்கி, அதை எனது அடுத்த கார் ரேஸில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். சரவதேச அளவில் நடத்தும் விருது விழாக்கள் மூலம் திரைப்படங்கள் உலக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. உதாரணமாக கொரிய படங்கள் இந்தியாவில் பிரபலமாகியுள்ளன. இதேபோல நம்ம நாட்ல எடுக்கற திரைப்படங்களுக்கும் உலகளவில் வரவேற்பு கிடைக்க வேண்டும். பாலிவுட் போன்ற ஒரு சில படங்கள் பட்டுமே உலக கவனத்தை ஈர்க்கிறது. இதேபோல இந்தியாவுல இருக்கற தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, போஜ்புரி மொழி சார்ந்த…

Read More

தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70வயதுக்கு மேற்பட்ட முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன்கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவலை பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாயுமானவர் திட்டத்தை மக்கள் பயன்படுத்துமாறும் கேட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றா மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ம் தேதி கரூரில் தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வந்ததுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த போது தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் வெளியே வரவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் பிரச்சாரத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர்…

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சதங்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நேற்று (அக்-2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான டெகநரைன் சந்தர்பால், சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், ஜான் கேம்பெல் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். தொடர்ந்து, பிரண்டன் கிங் (13), அலிக் அதென்ஷே (12) இருவரையும் முஹமது சிராஜ் வெளியேற்றினார். அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில்…

Read More

நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் இன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், “வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தும் நடைபெற அனுமதித்துள்ளீர்கள். நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? வழக்குப் பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிய வேண்டும் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்கு சாட்சி. நிகழ்ச்சி…

Read More

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் விஜய் விரைவில் சந்திக்க ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.…

Read More

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பேரில், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்ட மகேஷ்…

Read More