Author: Editor TN Talks
தேசப்பிதாவை கொன்றொழித்த இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா பிறப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. அஹிம்சை, அறவழியை உலகிற்கு போதித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு,…
சைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு; திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இது தான் ஓரணியில் தமிழ்நாடா? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு? 2021இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023-இல் 15% அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023-ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? சகட்டுமேனிக்கு சட்டம் ஒழுங்கு…
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.எல்.டி.20 லீக் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். மேலும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஜாம்பவான் அனில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்வின். மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 7-வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்து அதிர்ச்சியை அளித்தார். மேலும்,…
பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப் பிழைத்து இலக்கை அடைந்த இளைஞர்களின் கதைதான் ‘பைசன்’ திரைப்படம் என்று அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் பைசன். இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் ’பைசன்’ படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “என் திரை வாழ்க்கையில் பைசன் முக்கியமான படம். பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப் பிழைத்து இலக்கை அடைந்த இளைஞர்களின் கதைதான்…
தேசத் தந்தை மகாத்மா காந்தி மறைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் காலத்து அரசியல் இன்றைக்கு இல்லை. அவர் காலத்துச் சமூகம் இன்றைக்கு இல்லை. அவர் காலத்து மனிதர்கள் இன்றைக்கு இல்லை. ஆனாலும் சமூக வளர்ச்சிக்காகவும் தனிமனித எழுச்சிக்காகவும் காந்தியடிகளின் கோட்பாடு கொள்கைகள் இன்றளவும் நமக்குத் தேவையாக உள்ளன. அதனாலேயே இன்றும் நமக்கு மகாத்மா காந்தி தேவைப்படுகிறார். காந்தியடிகளை மீட்டுருவாக்க அவரது கொள்கைகளைப் புரிந்து கொள்வதும் கோட்பாடுகளைப் பின்பற்றுவதும் தான் உரிய வழியாகும். அதன் அடிப்படையில் இன்று நமக்கு காந்தியடிகளிடம் இருந்து படிப்பினைகளாகக் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை. அகிம்சை என்றால் அவர் மட்டும்தான்: அண்மைக் காலங்களில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் வன்முறையால் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது வன்முறையால் ஒரே இரவில் கிடைப்பதல்ல. அது அகிம்சை என்னும் அறத்தால் உருவாக்கப்படுவது. அநீதிக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தாமல், அகிம்சை வழியில் எதிர்க்கும்…
இயல், இசை, நாடகம் என முத்தமிழும் பெருமிதம் கொள்ளும் கலைஞர்களின் மூத்தோன் யார் எனக் கேட்டால், அது சிவாஜி கணேசனாகதான் இருக்க முடியும். ஏழு வயது சிறுவனாக மேடை நாடகத்தில் அறிமுகமான கணேசன், பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்து சிலிர்க்க வைத்தார். இதனை கண்டு வியந்த தந்தை பெரியார், சிவாஜியாக நடித்த கணேசனை, சிவாஜி கணேசன் என பாராட்ட, பின்னர் அதுவே அவரது பெயராகி போனது. அங்கிருந்து தொடங்கிய சிவாஜி கணேசனின் எழுச்சி, பராசக்தி படத்தில் நாயகனாக அறிமுகமான பின்னர், இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. மனோகரா, உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, பாவ மன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா என படத்துக்குப் படம் நவரசங்களிலும் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல், இந்தியளவிலும் நடிப்பு என்றால் அது சிவாஜி கணேசன்தான் என திரை…
தவெக தலைவர் விஜய் சுயமாக பேசவில்லை என்றும் இது ஒரு நேர்மையற்ற அரசியல் கருத்து என்றும் அவரது வீடியோ குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். உடனடியாக மத்திய அரசு ஏன் குழு அமைக்க வேண்டும், அண்ணாமலை ஏன் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டும், விஜயை சங்பரிவார் அமைப்புகள் வழி நடத்துகின்றன இது அவருக்கு ஆபத்தாக தான் போய் முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது.. மற்ற மாவட்டங்களில் நடக்கவில்லை என்றால் அந்த மாவட்டங்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அந்த மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளும் பொழுது அதிமுக ஆட்சியில் இருந்ததா? திமுகவில் ஆட்சியில் இருந்ததா? இந்த ஒப்பீடு தவறானது. மற்ற இடங்களில் பாதுகாப்பு தந்த அதே காவல்துறை தான் கரூரிலும் இருக்கிறது மற்ற மாவட்டங்களில்…
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் மிக கொடுமையானது. யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கரூர் சம்பவத்தில் அரசியல் குற்றச்சாட்டு இல்லாமல், அரசியலாக யாரும் பார்க்க வேண்டாம், மக்கள் நலனில் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய கூடிய பணியாக பார்க்கிறோம். தவெகவினர் முதலில் கேட்ட இடம் லைட் ஹவுஸ் கார்னர். அங்க எவ்வளவு பேர் நிற்க முடியும் சொல்லுங்கள்? அடுத்ததாக உழவர் சந்தை எவ்வளவு சிறிய இடம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடமாக நினைத்து வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டது. லைட் ஹவுஸ் பகுதியில் சந்திப்பு நடந்திருந்தால் அமராவதி ஆறு ஓடுகிறது, அசம்பாவிதம் இன்னும் அதிகமாகி இருக்கும். எவ்வளவு கூட்டம் வருகிறதோ…
கரூர் துயர சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். கரூரில் இதுவரை இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகள். கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். கூட்ட…
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு கருத்து கூற முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் ரவுண்ட் டேபிள், மதராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் ஆகியவை இணைந்து, கரூர் சோமூர் அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு சென்னைக்கு சிறப்பு விமானப் பயணத்தை (Flight of Fantasy) ஏற்பாடு செய்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பினார். விமானப் பயணத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜியிடம், கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட அரசு தான் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கிருந்து…