Author: Editor TN Talks
எண்ணூர் அனல்மின் நிலையத்தின் விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊரணமேடு கிராமத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தின் இருந்து 2 யூனிட்களின் மூலம் தலா 600 மெகாவாட் வீதம் 1.320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறாது. இந்த சூழலில் அனல் மின் நிலையத்தில் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் இருந்த போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் கீழே விழுந்ததுடன், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் கட்டுமான…
கரூர் சம்பவத்தின் மூலம் விஜய் பாஜகவின் கருவிதான் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தது நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்துள்னனர். தமிழ்நாடு அரசு, குறிப்பாக, முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே உயிரிழந்தோரின் எண்ணிக்கை மென்மேலும் பெருகாமல் தடுக்கப்பட்டன. அந்த பெருந்துயரம் குறித்து தகவலறிந்த உடனே மின்னல் வேகத்தில் இயங்கி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை களமிறக்கிவிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியதோடு சில மணி நேர இடைவெளியில் தனிவிமானம் பிடித்து நள்ளிரவு வேளையில் கரூருக்குச் சென்று அங்கே கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மற்றவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.…
ஆயுதபூஜை கொண்டாட்டத்தை ஒட்டி பூக்கள், பழங்கள், அவள், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு ஆயுத பூஜை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேடு சந்தையில் பாரிமுனை பூக்கடை பஜார், மயிலாப்பூர் சன்னதி தெருக்கள், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் தானா தெரு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கோயம்பேடு மார்க்கெட் பகுதி மட்டுமில்லாமல் சாலையோர கடைகளிலும் ஆயுத பூஜை பொருட்களை அதிகாலையிலேயே வங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து பாரிமுனை பகுதிகளிலும் ஆயுதபூஜை கொண்டாட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சைகள் பரவி வரும் சூழலில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அமுதா ஐஏஎஸ் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த தகவலில், கரூர் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, மின்சாரம் நிறுத்தப்பட்டதா, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் பிரச்சாரத்தில் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப்பாலமும், பெட்ரோல் பங்கும் உள்ளது. 2வது இடத்தில் 5000 பேர் மட்டும் தான் திர முடியும் என்பதால் வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. தவெக கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தவெகவினர் தான் ஜென்செட் கொட்டகைக்குள் புகுந்தனர். அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அமைப்பாளர்களே ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் ஃபோகஸ் லைட் ஆஃப் ஆனது. ஆனால் மற்ற இடங்களில் லைட் எரிந்தது. விஜய் பேசும்போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. ஆன்புலன்ஸ் தேவையில்லாமல் நுழைந்ததாக கூறப்படுகிறது. தவெக சார்பில்…
வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை…
கரூர் விவகாரத்தில் விஜய் ஒரு கட்சி தலைவர், அவரை ஏன் முதலமைச்சருடன் ஒப்பிடுகிறீர்கள் என மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் விஜய் பங்கேற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் 110 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தவெக நடத்திய வாதத்தில், அரசியல் காரணங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். கூட்டத்தில் சட்டவிரோதிகள் புகுந்துள்ளனர். கட்சிக்காரர்களை நாங்கள் தடுத்திருக்கலாம், மக்களை போலீஸ் தான் தடுத்திருக்க…
வத்திராயிருப்பு அருகே தீண்டாமை சுவரை அகற்றிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் காட்டு வேலைக்கு செல்லும் வழியில் அரசு பொதுப்பாதையாகவும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய தெருவாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியை மறித்து தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாக தொடர்ந்து அப்பகுதியில் வசிக்க கூடிய மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், தீண்டாமை சுவரை அகற்றிட வலியுறுத்தி பலமுறை கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 23 ம்…
நானும் மனுஷன் தானே என கரூர் சம்பவம் தொடர்பாக உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ”என் லைஃப்ல இந்த மாதிரி வலி நிறைந்த நிலைமையை நான் பார்த்ததில்லை. மனசு முழுக்க வலி, வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் என்ன மக்கள் பார்க்க வருகிறார்கள். அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் என்மேல் வைத்துள்ள அன்பும், பாசமும் தான். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லாத்தையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு ரொம்ப கவனமாக இருந்தோம். இந்த அரசியல் காரணத்தை எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து மக்களோட பாதுகாப்பை கருதி அதுக்கான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனால், நடக்க கூடாது நடந்துவிட்டது. நானும் மனுஷன் தானே. அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும்போது நான் எப்படி அங்கிருந்து வர முடியும். நான் திரும்ப அங்க போகனும்னு இருந்தா அத ஒரு காரணம் காட்டி பதற்றமான சூழலும், மேலும் சில சம்பவங்கள்…
தமிழக வெற்றி கழக ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் உரையாடிய டெலிகிராம் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கிடையில், தவெகவின்…
ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். ஆயுதபூஜை தொடர் விடுமுறையை ஒட்டி 26ம் தேதி சென்னையில் இருந்து இயக்க கூடிய தினசரி 2,092 பேருந்துகளுடன் 450 சிறப்பு பேருந்துகளும், 27ம் தேதி 696 சிறப்பு பேருந்துகளும், 29ம் தேதி 194 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 3 நாட்களில் 3,80,800 பயணிகள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 1,310 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டன. ஆயுத பூஜைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பேருந்துகளின் விவரம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார். ஆயுத பூஜை விடுமுறைக்கு ஒட்டு மொத்தமாக சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அரசு பேருந்துகளில் 50,913 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 26,013…