Author: Editor TN Talks
த.வெ.க. கட்சி கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு மனுவிற்கு, தவெக தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிற கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர்…
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி ஊக்கத் தொகையை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். 819 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஆனந்த்குமாருக்கு ரூ.1.80 கோடியும், செஸ் வீரங்கனை வைஷாலிக்கு ரூ. 75,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா துப்பாக்கிச்சுடுதலில் வெற்றிப்பெற்றதால் அவருக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய துணாஇ முதலமைச்சர், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெற்ற. காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம்,…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக சென்னையில் அரசியல் தலைவர்களின் இல்லம், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம், கடற்படை உணவகம், மத்திய அரசு நிறுவனங்கள், அதிமுக தலைமை அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மேலூர் மெயின் ரோட்டில் உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனே நீதிமன்றத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேநேரம் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அலர்டான…
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜுவுக்கு திமுக செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலும், பேச்சாளராகவும் இருந்த மருது அழகுராஜ்க்கு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் இருந்தார். தொடர்ந்து அதிமுகவில் சலசலப்புக்கு இடையே அங்கும், இங்குமாக மாறிய மருது அழகுராஜ் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் திமுக எம்பி, எம்.எல்.ஏ. களை சந்தித்து தேர்தல் பணிக்கு ஆயத்தம் ஆகும்படி பேசி வருகிறார். இந்த நிலையில், மருது அழகுராஜை எதிமுகவின் செய்தி தொடர்பாளர் துணை தலைவர் பொறுப்புக்கு நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதேபோல் மாவட்ட செயலாளார் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோவை கார்த்திக்கு தீர்மானக் குழுச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஊடக விவாதங்களில் கட்சியின்…
மக்களை சந்திக்கும் விஜய் பிரச்சாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை மாநாட்டை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட மக்களையும் நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 13ம் தேதி தொடங்கிய விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சி, நாகை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை முடித்துள்ளார். அடுத்ததாக, நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு செல்லும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த சூழலில் டிசம்பர் மாதத்துடன் முடிய உள்ள விஜய்யின் சுற்றுப்பயணம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயணத்தின் போது அதிகளவில் மக்கள் கூட்டம் வருவதால் உரிய நேரத்தில் பேச முடியாமல் போவது, போக்குவரத்து நெரிசல், மக்களின் பாதுகாப்பு நடவடிக்கை என பல பிர்ச்சனைகள் எழுவதால், ஒரே நாளில் இரண்டு மாவட்டத்திற்கு பதிலாக 3 மாவட்ட மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னையில் விஜய்யின் பிரச்சாரம் எப்பொழுது என்ற கேள்விக்கு அவர் அக்டோபர் 21ம் தேதி சென்னை மக்களை சந்தித்து பேச உள்ளதாக…
ஊர்ந்து சென்று முதல்வரானவர் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என பேசி தமிழக மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க…
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோத உள்ளது. 17வது ஆசிய கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணியின் அதிரடி பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி பாகிஸ்தானி அசத்தல் பங்கு வீச்சால் சுருண்டது. இதியாக 11…
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புள்ளி விவரத்துடன் பாஜகவை சேர்ந்த கல்யாண் ராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளாய், ஆனாலும் உன்னுடைய அபிடவிட்டில் மனைவியின் தொழில் முதலீடுகளை காட்டாமல் மறைத்துள்ளாய். இது சட்டப்படி பெரிய குற்றம் என்பதை நீ மறந்து விட்டாயா? ஒருவேளை நீ வெற்றி பெற்றிருந்தாலும்,இதே காரணத்தை வைத்து உன்னை தகுதி நீக்கம் செய்ய முடியும்.ஆனால் நீ போட்டியிட்டதே திமுகவை வெற்றி பெறச் செய்யத்தானே. கடந்த ஐந்து ஆண்டுகளில் உன் மனைவி பெயரில் நடந்துள்ள முதலீடுகள், “ Burrow Properties Pvt Ltd நிறுவனத்தில் ரூ.1.23 கோடியும், Lands & Lands Ventures India Pvt Ltd நிறுவனத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது கோவையில் குட்டி G-Square போல வளர்ந்து வருகிறது. மேலும் தகவலுக்கு சூலூர், செலக்கரச்சல் 6 ஏக்கரில்…
இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்தாலும், தொடரும் சாதிய ஆணவப் படுகொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதனால் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் விதமாக, தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதனையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு, சாதி வெறியர் என்ற சர்ச்சையில் சிக்கிய கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருது அரிவித்துள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கலை, சின்ன திரை, சினிமா ஆகிய துறைகளில் சாதனைப் படைப்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுப் பட்டியலில், கிராமியக் கலைகள் என்ற பிரிவில் கே.கே.சி பாலு என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மி கலையை பிரபலப்படுத்தி வருவதற்காக கே.கே.சி பாலுவுக்கு இந்த கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை திமுகவின் கூட்டணிக் கட்சியினர்…
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு வெளியிட்ட கடிதத்தில், கடந்த அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வன்னியர் சங்கமும், பாமகவும் அறவழியில் நடத்திய போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் ஏற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சில விஷமிகள் நீதிமன்றம் வரை சென்று வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடையாணை பெற்று, இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறை படுத்தவிடாமல் செய்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கை மூலம் சாதிவாரி கணக்கீட்டை நடத்தி, வன்னியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், 10.5 சதவீத தனி ஒதுக்கீட்டை…