Author: Editor TN Talks
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார். இதில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகள், விளையாட்டு சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். இதைத்தொடர்ந்து புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு நடப்பாண்டு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியில், அத்திட்டங்களின் விரிவாக்கமும் நடைபெற உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை தொடங்கிய விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து செப்டம்பர் 13ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து மக்களை சந்தித்து பேசி வருகிறார். விஜய்யின் இந்த சுற்றுப்பயணம் டிசம்பர்20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் பரப்புரை செய்த விஜய் 3 நிமிடம் மாட்டுமே பேசினார். தொடர்ந்து கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரில் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும், இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை செய்ய உள்ளார். இந்த நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணம் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. டிசம்பர் 20ம்…
சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட அரசியல்வாதியாக தவெக தலைவர் விஜய் உள்ளார். வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ள சமூக வலைங்களில் அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆக்டிவாக இருக்கின்றனர். தற்போது அனைத்தையும் பகிரும் ஒரு தளமாக சமூக வலைதளம் மாறியுள்ளது. இந்த சூழலில், அரசியல் வாதிகளை அதிகம் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் விஜய் முதலிடத்தில் உள்ளார். விஜய் கணக்கை இன்ஸ்டகிராமில் 1.46 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 பேரும் பின் தொடர்கின்றானர். இவரை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்ஸ்டகிராமில் 18 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 31 லட்சம் பேரும் எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரும் பின் தொடர்கின்றானர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்ஸ்டகிராமில் 63 ஆயிரம் பேரும், ஃபேஸ்புக்கில் 1.68 லட்சம் பேரும், எக்ஸ் தளாத்தில் 6.55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். இவர்களின்…
கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணி வெங்கடேசனுக்கும் பிறந்தவர் பீலா வெங்கடேசன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற இவர் இந்திய குடிமைப்பணி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆனார். பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர், செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். தொடர்ந்து 2020ம் ஆண்டு சுகாதார துறை செயலாளர் பதவியில் இருந்த இவர் பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டை பெற்றார். தற்போது தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அதிகாரிக்கு அரசு தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து நேற்று பீகாரருக்கு புறப்பட்டு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பாட்னாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார் சென்னை திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெரும்பதை பதில் அதிமுக போது எடப்பாடி பழனிச்சாமி விசுவாசமாக இருக்கிறாரா.. அந்த கட்சி ஆரம்பித்தது எம்ஜிஆர் எம்ஜிஆரை பற்றி பாஜக என்னென்ன பேசக்கூடாதோ அதை எல்லாம் பேசினார்கள் அம்மையார் ஜெயலலிதா குறித்து தண்டனை பெற்றவர் ஊழல்வாதி என்றெல்லாம் பேசினார்கள்.. அந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாமா அவர் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரா எங்கள் கட்சியை பேசக்கூடிய அருகதை தகுதி அவருக்கு கிடையாது நாங்கள் நாற்காலிக்கு கீழே சென்று காலை பிடித்து பதவி பெறவில்லை காங்கிரஸ் கட்சி மீது பற்று இல்லாமல்…
நாட்டில் எந்த கட்சியிலாவது குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? என முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2வது நாளாக நீலகிரியில் பிரச்சாரம் செய்து வருகிறார். கூடலூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டு கல்வியில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியவது கொண்டு வரப்பட்டதா? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தான் ஸ்டாலின் அரசு ரோல் மாடலாக உள்ளது. கமிஷன், ஊழல், வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி, ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதில் தாந்திமுக அரசு ரோல் மாடலாக உள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்தபோது 525 வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் அதில் 98 % வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். அது முற்றிலும் பொய். இதிலும் நீங்கள் தான்…
புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீரை குடித்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் 6 நபர்கள் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல் வீதி, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பகுதிகளில் மாசு கலந்த குடிநீரை குறித்து 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதாள சாக்கடை இணைப்புக்காக ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு சேதப்படுத்தியதன் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது தகவல் வெளியாகியுள்ளது, இதனை சரி செய்யும் பணியில் பொதுப்ணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.. வருகின்ற சட்டமன்ற தொகுதியில் நாம் வெற்றிபெற இக்கூட்டமே சாட்சி. திமுக நான்கு ஆண்டுகளில் கூடலூருக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் அரசு அறிவியல் கல்லூரி கொண்டு வந்தது. நீலகிரி மக்களுக்காக அதிமுக உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 50 சதவீத பணிகள் முடிந்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தனர். இதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்துகிறது. மலை மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் கோவை செல்ல வேண்டிய…
நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். தொடர்ந்து வாங்கிய கடனை கட்டாவிட்டால் விரைவில் வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி சார்பில் ரவி மோகனுக்கு கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரவி மோகன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் “டச் கோல்ட் யுனிவர்சல்” என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ரவி மோகன்…
நேற்று ஒரே நாளில் 85 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. நேற்று காலை, மாலை என இரு வர்த்தக நேரத்திலும் தங்கம் விலை ஏற்றம் கண்டு ரூ.85,120க்கு விற்பனையானது. இந்த சூழலில் இன்றும் தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்ட நிலையில், காலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சற்று இறக்கம் கண்டது. சென்னையில் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கும் தங்கம் விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக நேற்று உச்சம் தொட்ட தங்கம் இன்று சற்று குறைந்திருப்பது இல்லத்தரசிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.