Author: Editor TN Talks
நேபாளத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கருத்து கூறிய பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை, அவரின் இந்தக் அவதூறு கருத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் இந்த கருத்து அண்டை நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும். நேபாளம் என்பது சுதந்திரமும், இறையாண்மையும் கொண்ட நாடு. அங்கு நடைபெறும் அரசியல், சமூக சம்பவங்களுக்கு இந்திய காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சொல்வது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி அண்டை நாடுகளின் இறையாண்மையையும், ஜனநாயக மரபுகளையும்…
ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் ஜாக்பாட் அடிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கூலி படம் முதல் ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களும் வெளியாக உள்ளன. இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான ’கூலி’ திரைப்படம்தான். ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசான கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதேபோல் ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், வேம்பு படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளன. அதேபோல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த Phoenix திரைப்படம் டென்கொட்டா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்…
கலவரம் வெடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பில் இருந்தும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையாலும், கலவரத்தாலும் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களின் தஞ்சம் அடைந்தனர். நாடே வெகுண்டெழுந்ஹ இந்த கலவரத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்கவில்லை என்றும், அவர் ஒருமுறை கூட மணிப்பூருக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்திக்கவில்லை என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். மணிப்பூர் கலவரம் வெடித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரதமர் மோடி நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பிரதமர் செல்லும் பயணம் குறித்த தகவல் வெளியானதால் காங்கிரஸ் கடுமையாக…
Tvk Vijay: தவெக தலைவர் விஜய் பெரம்பலூரில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில் நிபந்தனைகளுடன் மற்றொரு இடத்தில் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் வரும் 13ம் தேதி திருச்சியில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய இரு முறை அனுமதி மறுத்த நிலையில் வேறொரு இடத்தில் அதாவது திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் செய்ய 23 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் 13ம் தேதி மாலை பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு பகுதியில் பிரச்சாரம் செய்ய மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் வழங்கினார். அதை பரிசீலித்த போலீசார் விஜய் கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளித்துள்ளனர். காமராஜர் வளைவு பகுதியில் விஜய் பிரச்சாரம்…
துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். இந்தியாவின் 17வது துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் வித்யாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியை மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்ய உள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை குடியரசு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆனது. இந்த பதவிக்கு…
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90களில் உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கப்பட்டதாக செய்தி வெளியானது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து, அவர் நடிக்கும் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி யாரும் பயன்படுத்த வேண்டாம் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், சமூக வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படைங்கள் பகிரப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்களில் தனது புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும் முறையிடப்பட்டது. மேலும், இணையதளங்களில்…
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கழிவறைகளை பராமரிக்கவும், அதற்கான பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு கழிவறைகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கறிஞர் கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு கைதிகளே நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதற்கான உபகரணங்களான முக கவசம், கையுறைகள், காலணிகள் போன்றவை வழங்கப்படுவதில்லை. தமிழ்நாடு சிறை விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். சிறைகளில் கழிவறைகளை பராமரித்து சுத்தப்படுத்துவது குறித்து அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், ஏற்கனவே,…
ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சிபிஐக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி, மகனுக்கு, 19 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு…
திமுக முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை ஒரு கோடி குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது.. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுக முன்னெடுத்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர்; இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று தமிழ்நாடு முழுக்கவும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைத்துள்ளன. இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன. வரும்17 ஆம் தேதி கரூரில் நடைபெற இருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான மக்களின் முன்பாக எடுக்க…
17வது ஆசிய உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17வது ஆசிரிய கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடந்த இருந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அபுதாப்பிக்கு மாற்றப்பட்டது. 8 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த நிலையில் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் வரும் 14ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஆசிய உலக கோப்பையில்…