Author: Editor TN Talks
இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை..,.இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.-சீமான் பேட்டி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்த கேள்விக்கு: ராதாகிருஷ்ணன் பதவியேற்பு சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சனிக்கிழமைகளை மட்டும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு: அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது. திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த…
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சி ஐசியூ-விற்கு செல்வார்கள் என்பது தெரியவரும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார். பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம். அதிமுக பாஜகவை உடைத்து விட்டதாக உதயநிதி விமர்சனம் குறித்த கேள்விக்கு: அதிமுக வலுவாக தான் உள்ளது. அண்ணன எடப்பாடி பழனிச்சாமி போகும் இடமெல்லாம் ஆரவாரம் கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள் அவர்கள் பொறாமையிலேயே சொல்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை…
பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி. முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு உடனடியாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆட்சேபனை தெரிவித்தலிருந்து, தந்தை மகன் இடையே மனக்கசப்பு தொடங்கியது. அதன்பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், பாமக-வில் குழுக்கள் உருவாகிவிட்டதாக, அன்புமணி மீது மறைமுக தாக்குதலை தொடங்கினார். அதன்பின்னர் செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என முடிவெடுத்தார். தந்தை ராமதாஸ் என் மீது கோபமாக இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் இல்லை என…
ஒசூருக்கு முதலமைச்சர் வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒசூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதற்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. பின்னர் ஒசூரின் தளி சாலை பகுதியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு எல்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அசெண்ட் சர்கியூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு சூளகிரி பேருந்து நிலையத்தில் ரோடு ஷோ நிகழ்வில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து நாளை கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருக்கும் சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிட உள்ளா.ர் பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையெல்லாம் முடித்து கொள்ளும் முதலமைச்சர் மீண்டும் சென்னை திரும்புவார்…
கனிமங்கள் மீதான உரிமையை பறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவலில், முக்கியமானக் கனிமங்களை அள்ளித்தோண்டி எடுப்பதிலும், தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றும். ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.. அக்கடிதத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் (radar, sonar). மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகளை உருவாக்க அரிய வகை கனிமங்கள் அதிகம் தேவைப்படுவதால் முக்கியக் கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களை தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி அவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறையானது சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், மூன்றாம் நிலை அணுமின் உற்பத்திக்குத்…
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பாக உதயகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், புரட்சித் தமிழகம் கட்சியை சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது பின்னர் ஏர்போர்ட் மூர்த்தி கத்தி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை வைத்து தாக்கிய ஏர்போர்ட் மூர்த்தியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில்…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மரக்கடையில் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் மாநகர காவல் துணை ஆணையர் சிபின் பரிசீலனை செய்துள்ளார். தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் ஆகியோர் தவெக தலைவர் விஜய் பேசுவதற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவு நிலையில் அவர்களுக்கு கடிதம் காவல்துறை துணை ஆணையர் சிபின் அனுமதி கடிதத்தை வழங்க உள்ளார். திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் காலை 10:30 மணியில் இருந்து பதினோரு மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் விஜய் பேச முடியும் என்றும், காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து வைத்திருக்க வேண்டும் என்றும்,…
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை பகுதியில் 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட மறுத்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி பின்புறம் மோர் மார்க்கெட் பகுதியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மெரினா கடற்கரை உள்ள உழைப்பாளர் சிலை முன்பு திரண்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு…
தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 5460 தங்க நாணயங்களை வாங்குவதற்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையால் மகளிர் நலன் அடிப்படையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படுகிறது இந்த நான்கு திட்டங்களிலும் பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் நிதி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் அதாவது 22 காரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த 4 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் எடையுள்ள 5,640 8 கிராம் தங்க நாணயங்களை (22 காரட்) கொள்முதல்…
Asia Cup 2025: 17 வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்ந்து துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய தொடரில் ஏ மற்றும் பி பிரிவுகளில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் போட்டியில் 8 சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் சர்தேச போட்டிகளில் 4 முறை பலபரீட்சை செய்துள்ளன. இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில்…