Author: Editor TN Talks
தவெக விஜய் வரும் 13ம் தேதி தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து மேற்கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை முடித்த விஜய் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் வரும்1 3ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் செய்வதால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த விமானம் மூலம் திருச்சிக்கு விரைந்தார். அங்கு அவரை தவெக தொண்டர்கள் உற்சாகமாக வழிப்பட்ட்னார். புஸ்ஸி ஆனந்த் வருகையை ஒட்டி தவெகவினர் குவிந்ததால் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சீராக்கும் போது தவெகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெகவை சேர்ந்த 8 பேர் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு…
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகின்ற 17ஆம் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள் – மரங்களிடையே கூட பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையில் கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது…
கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார். வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மகாதேவ்புரா நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டுவந்தார். மகாதேவ்புரா தொகுதியில் பலருக்கு ஓர் எழுத்தில் பெயர் இருந்தது. பலருக்கு கதவு எண் 0 என குறுப்பிடப்பட்டுள்ளது. ஓரு வீட்டில் 120 பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். இதனை எல்லாம் அம்பலபடுத்திய பின்னரும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதியை இழந்தது. போலியான…
என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனே காரணம் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், இதற்கு நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகிய டிடிவி தினகரன், தான் கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், இது குறித்து விளக்கமளித்துள்ளார். “ எனக்கும் டிடிவி தினகரனுக்கும் தனிப்பட்ட விதத்தில் பிரசினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான் தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது. தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. நான் மாநில தலைவர். தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. தேசிய…
பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. வாக்காளர் பெயர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுப்பட்டு வாக்கு திருட்டு செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவரது இந்த குற்றச்சாட்டை பறைச்சாற்றி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நெல்லையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்வப்பெருந்தகை, பொய், பித்தலாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியதுடன், கண்டனத்தையும் பதிவு செய்தார். மேலும், மக்களுக்கான பிரச்சினைகளை காங்கிரஸ் எப்போதும் கையில் எடுக்கும்.தமிழகத்தை வலியுறுத்தி…
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு நிபுரணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பள்ளிகள், ரயில் நிலையம் பகுதிகளில் அவ்வபோது வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று சென்னை மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து கோயம்பேடு மார்க்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால், அது வெறும் புரளி என தெரிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த சிறுவனை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அந்த புரளி அடங்குவதற்குள் சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதனால், தலைமை செயலகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுரணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடமைகள், பைகள் உள்ளிட்டவைகளில் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு…
நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவன்கேரா, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு…
பாஜகவில் இருந்து புதுச்சேரி மாநில முன்னாள் தலைவர் சாமிநாதன் விலகுவதாக அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியில் 3-முறை மாநிலத் தலைவராகவும், 1-முறை நியமன சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பணி செய்து வந்தவர் சாமிநாதன். இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் ”புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ”தமிழ்நாடு வளர்கிறது” என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ம் தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, 7 நிறுவனங்களுடன் ரூ.8,496கோடி முதலீடுகளை ஈர்த்தார். முதலமைச்சரின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் போது மொத்தம் ரூ.15,516கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணத்தை…
மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து அதிமுகவில் பலகட்ட குழப்பங்கள் நடந்து வருகிறது. பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவதும், அதிமுகவுக்கு எதிராக கருத்துகளை பதிவிடுவதும், அவர்களை கட்சியை விட்டு தலைமை அகற்றுவதுமாக நடந்து வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். கடந்த 5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். உடனே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு…