Author: Editor TN Talks

செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதால் எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் பூகம்பம் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறிய நிலையில், அவரை கட்சி பொறுப்பில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து வரும் 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன்  என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதில், நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால முடிவை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்து செல்வேன். செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து…

Read More

சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது சிறுவன் என தெரியவந்தது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்ட ரயில்வே நிர்வாகம் கோயம்பேடு மார்க்கமாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகமும், கோயம்பேடு போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அதில் மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில்…

Read More

இன்று முழு சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் பல்வேறு பகுதிகளில் நிலவு ரத்த சிகப்பாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தின் போது நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுளது. ஆசிரியாவிலேயே இந்தியா, சீன பகுதிகளில் மட்டுமே நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நடைபெறுவதாக கூறிய வானிலையாளர்கள்,  முழு சந்திர கிரகணத்தையும் கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என கூறியுள்ளனர். இன்று இரவு 9.56 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணமாக மாறி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிகிறது. கிட்டத்தட்ட 85 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிலவும் என கூறப்படுகிறது. அதிகாலை 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறும். இதேபோன்ற மற்றொரு முழு சந்திர கிரணம் 2028ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் நிகழும் என்றும்…

Read More

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 5ம் தேதி கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்கள் பிரச்சாரத்தில் தான் பங்கேற்கபோவதில்லை என்றும் அறிவித்தார். செங்கோட்டையன் கூறியதை தொடர்ந்து அவரை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செங்கோட்டையன் வரும் 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை மறுநாள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் செங்கோட்டைஇயன், அன்றே அதிரடியான சில தகவல்களை பேசலாம் என கூறப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவில் இருக்கும்…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் அனைவரும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேசியதால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து இபிஎஸ் அறிவித்தார். இந்த சூழலில் கட்சி தலைமை எடுத்த நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும் என செங்கோட்டையன் அறிவித்தார். இப்படி அதிமுகவில் அதிரடி நடவடிக்கள் எடுக்கப்படுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு  ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ”தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றிட ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மாவின் நூறாண்டு கால கழக வெற்றி கனவை நிறைவேற்ற  கழக மூத்த முன்னோடி முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் முயற்சிகளுக்கு அதிமுக தொண்டர்களின் சார்பில் நன்றி என கூறி ராமநாதபுரம் நகரின்…

Read More

அதிமுகவில் சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு பரபரப்பான நிலையில் மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினேன் என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவு அடிப்படையில் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இதை நாங்கள் நிதானமாக யோசித்து எடுத்த முடிவு. அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியை சரியாக கையாண்டார். ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு இந்த கூட்டணியை கையாள தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆணவமாக பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து…

Read More

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு அக்கட்சி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடும் அதிருப்தியும் காணப்பட்டு வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்ததால் பல தலைவர்கள் அதிமுகவில் இருந்து விலகியும் வருகின்றனர். அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தது, அவரது பெயரை பொது மேடையில் தவிர்த்தது என செங்கோட்டையனின் செயல், அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை தனது ஆதரவாளர்களுடன் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து விடுவாரோ? அல்லது ஓபிஎஸ், டிடிவி போன்று தனியாக சென்று விடுவாரோ என்றெல்லாம் பேசப்பட்டது. இது குறித்து நேற்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இபிஎஸ் 10 நாட்களுக்குள் ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார். இது…

Read More

சென்னையில் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 29ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர். ஆனால், நேற்று  முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. இவ்வளவு நாளாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை குறைந்ததால் மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் நேற்று அதிரடியாக விலை மேலும் மறுபடியும் உயரந்தது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ரூ.78,920க்கு விற்கப்பட்டது. கொரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.70 உயர்ந்து ரூ.9,865க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சுழுஅலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதன்முறையாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருகிராம் தங்கத்தின் விலையில் ரூ.240 உயர்ந்து ரூ.10,005 க்கும் ஒரு…

Read More

புரோ கபடி தொடரின் லீக் சுற்றில் பெங்களூருவை யு மும்பா அணி தோற்கடித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது புரோ கபடி லீக் தொடர். 12-வது ஆண்டாக இந்தாண்டு கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரின் முதல் லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12 முதல் 27 வரையிலும், சென்னையில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 10 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 11 முதல் 23 வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்ட்த்தில் யு மும்பா அணியும், பெங்களூரு அணியும் மோதின. இதில் யு மும்பா அணி 48-28 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. அதேப் போல மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி யோத்தாசை தோற்கடித்தது.

Read More

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.15,516கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் 15,320 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர் அலுவலர்களுடனான உயர் மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அதில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். தனது சுற்றுப்பயணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”லண்டனில் இருந்து மகிழ்ச்சியான செய்தி. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார…

Read More