Author: Editor TN Talks
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக, தவெக என அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை முன்னெடுத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியாக சென்று திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அது குறித்து முதன் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இபிஎஸ் ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்…
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் அரசியல் வேலைகளிலும், பிரச்சார பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களின் மாநாடு, ஆடு மாடு மாநாடு என புது ரூட்டை கையில் எடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சீமான் கடந்த ஜூலை 10ம் தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டையும், ஆகஸ்ட் 30ம் தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்தார். அதனடிப்படையில் ஆடு மாடுகளுக்கான மாநாடு, மாடு மேய்க்கும் போராட்டம், மரங்களின் மாநாடு நடத்திய சீமானுக்கு வரவேற்பு கிடைத்தது. மாடுகள் முன்பு சீமான் பேசியது விமர்சிக்கப்பட்டாலும், மேய்ச்சல் சார்ந்த அவரின் செயல் பின்னர் வரவேற்பைபெற்றது. இதேநேரம், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் ஆதரவு சீமானுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவதால் அவற்றை காப்பாற்றும் விதமாக புது வகையான மாநாட்டை சீமான் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.…
செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்து விட கூடாது என்பதற்காக சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று கொண்டதாகவும், கழகம் உடைந்து விட கூடாது என்பதற்காகவே அமைதி காத்ததாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணி வைக்க வலியுறுத்தியும் அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக குற்றச்சாட்டையும் செங்கோட்டையன் வைத்தார். கடைசியாக அதிமுகவின் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் செங்கோட்டையன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்துள்ளதாக சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதை கழகத்தின் மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்துள்ளதாகவும்,…
செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என சசிகலா அறிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர் தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் இது குறித்து இன்று விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன். இது குறித்து தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ”அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைக்க வேண்டும்; ‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவின் சக்திகள் பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டு பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; அந்த நிலை…
பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின் படி 70 வயதை கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் அப்பதவியில் இருந்து விலகினார். அதனால், துணைத் தலைவராக உள்ள ராஜீவ் சுக்லா தற்போது தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார். கிரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பலபரீட்சை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசை சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு தேர்வு செய்யும் ஒரு சேவை பேருந்து சேவை. ரயில் மற்றும் விமானங்களில் 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் தான் பயணம் செய்ய முடியும். அப்படியிருக்க உடனடியாக மக்கள் பயணம் செய்ய தேர்வு செய்து பேருந்து சேவை தான். வார விடுமுறையாக இருக்கட்டும், அல்லது ஏதேனும் தொடர் விடுமுறையாக இருக்கட்டும், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அரசுப் பேருந்துகளை தாண்டி ஆம்னி பேருந்துகளிலும் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனை பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகள் அரசு விதித்துள்ள கட்டணத்தை தாண்டி பல மடங்கு உயர்த்தி வசூலில் ஈடுபடும். இது குறித்து பயணிகள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக அரசு தரப்பிலும் பல நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை நின்றபாடில்லை.…
செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு அதிலிருக்கும் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியுடன் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் மூலம் அவர் அதிமுகவில் இருந்து விலகி விடுவாரோ என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து இன்று விளக்கமளிப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்படி, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா. ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்தே…
எடப்பாடி பழனிசாமியே கூட 2009-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தான் என்று கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசமாக கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் இதே மனநிலையுடன் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான பணிகளை எடுக்க நேரிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு.. கேள்வி – ஏறத்தாழ 150 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டார், இப்போது இந்த கோரிக்கை சரியானது தானா? பதில் – ஆறு மாதத்திற்கு முன்னர் கட்சி ஒருங்கிணைப்புத் தொடர்பாக இபிஎஸ்-ஐ சென்று சந்தித்து வந்தபிறகு என்னிடம் கட்சி தொடர்பான முக்கிய தகவல்களை அவர்…