Author: Editor TN Talks
இந்தியா ரஷ்யாவிலிருந்து பெரும் அளவு கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை வாங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவும் பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காக, பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். அங்கு ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சிரித்து பேசியிருந்தனர். 3 பேருக்கும் இடையே நிலவிய நெருக்கம், அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 3 தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “3 பேரின் சந்திப்பு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் மோடி, உலகின் 2 மிகப்பெரும் சர்வாதிகாரிகளான புதின், ஜின்பிங் ஆகியோருடன் ஒன்றாக காணப்பட்டது வெட்கக்கேடானது. அதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்திய…
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மிகப்பெரிய நெருக்கடிக்கு தயாராகும்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரப்பரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – கஸா போர் ஆண்டு கணக்கில் நடந்து வருவதால் உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. உலக நாடுகளின் மோதலால் மூன்றாம் உலக போர் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த உக்ரை – ரஷ்ய மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்ய, உக்ரைன் போரையும், இஸ்ரேல் போரையும் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். உக்ரைன், இஸ்ரேல் போர் ஓரளவுக்கு அமைதியாகி வரும் சூழலில் 2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான பெரிய நெருக்கடிக்கு தயாராகும்படி, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவனைக்கு பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. போர்க்காலத்தில்…
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550 ரொக்கம் வசூலாகியுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையும் படிக்க: கடல் உணவு ஏற்றுமதி: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் கடும் பாதிப்பு! நேற்று (தேதி குறிப்பிடவும்) கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இந்த காணிக்கை மூலம், 275 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 700 கிராம் வெள்ளியுடன், ரொக்கமாக ரூ.6,18,53,550…
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் மற்றும் பிற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்வது, அமெரிக்காவின் புதிய 50% வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தியாவிலிருந்து சுமார் ரூ.23,000 கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த வரி விதிப்பின் காரணமாக, தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான இறால் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள், ஒரு கண்டெய்னரில் 3% முதல் 4% வரை மட்டுமே லாபம் கிடைப்பதாகவும், புதிய வரி விதிப்பால் லாபத்தை விட வரி அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அனுப்பப்பட்ட கண்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்துவிட்டதால், அவை அமெரிக்காவை சென்றடைய 15 நாட்கள் ஆகும் வரை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை கண்டெய்னர்கள் ஏற்கப்படாவிட்டால், அவை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும். அல்லது வேறு நாடுகளுக்கு…
பெரியார் ஏற்றி வைத்த சமூக நீதி என்னும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருப்பதாக கூறி திமுக சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வெளியிட்ட “சமூக நீதி எனும் பெரு நெருப்பு” என்ற குறும்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர் விட்டு எரிந்து கொண்டு வருகிறது. இந்த பெரும் நெருப்பு அணைந்துவிடும் என இன எதிரிகள் நினைத்த போது, சமூக நீதி சுடரை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா எடுத்து கொண்டு ஆட்சி அமைத்தார். அண்ணாவின் ஆட்சி விரைவில் முடிந்து விட, சமூக நீதி நெருப்பு மேலும் அனைந்திடும் என இன எதிரிகள் நினைத்தனர். ஆனால், அதை சுக்கு நூறாக உடைத்த கருணாநிதி, எளியவர்களுக்கு நம்பிக்கையாகவும், ஒளியாகவும் அண்ணா சந்த சமூக நீதி சுடரை கையில் வாங்கினார். இந்த நிலையில் அண்ணா…
திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம், அனல்மின் நிலையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே கங்கா காவேரி என்ற பெயரில் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் என்பவர் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வசித்து வந்த நிலையில், குடியிருப்பில் மாடி ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற காட்டூர் போலீசார், இறந்த அமரேஷ் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி குடியிருப்பு வளாகத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிலர்…
வெளிநாட்டு சாக்லேட் போல் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், எத்தியோப்பியாவில் இருந்து வந்த இருவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் ரூ. 70 கோடி மதிப்பிலான 5.6 கிலோ கொகைன் இருப்பது தெரிய வந்தது. இந்த கொகைனை கடத்தி வந்த இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அதில் போதைப்பொருள் கடத்துவது தெரியாமல் இருக்க, ஃபெர்ரரோ ரோச்சர் என்ற பிரபல சாக்லேட்டின் தங்க நிறைத்தில் கொகைனை மறைத்து சாக்லேட் போல் கடத்தி வந்தது அம்பலமானது. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் முதற்கட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட கொகைன் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கொகைன் சாக்லேட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் தொடர்ந்து…
தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்விற்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் நடித்திருந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து திரும்பி வரும்போது பெங்களுரூவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். அதில், ரன்யா ராவ்விடம் 14 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் செய்த ரன்யா ராவ் அங்கிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான டிஜிபி கேடரில் இருந்த ராமச்சந்திர ராவ், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் வருவாய் புலனாய்வுத்துறை கைதாகி சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த…
மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் அறிவித்ததை தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டணியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து கோபியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. 18 ஒன்றிய செயலாளர்களில் 16 ஒன்றிய செயலாளர்களும், நகர செயலாளர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பவானி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்றுள்ளார். அதிமுக தலைமையில் அதிருப்தி இருக்கும் செங்கோட்டையனுக்கு பண்ணாரியின் ஆதரவு…
கர்நாடகாவில் வாக்குத் திருட்டு, பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் என இந்திய அரசியல் களம் அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மத்திய பாஜக அரசுடன் தேர்தல் ஆணையமும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் நாட்டையே அதிர வைத்துள்ளது. இவைகளுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்திய பேரணியின் நீட்சியாக, தமிழக காங்கிரஸ் தரப்பிலும் மாபெரும் மாநாடு நடைபெறவிருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்… இந்திய அரசியலமைப்பு எப்பேற்பட்ட பெரும் ஆபத்தில் இருக்கிறது என்பதை சில வாரங்களுக்கு முன்னர் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார் ராகுல் காந்தி. கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 5 வெவ்வேறு முறைகளில் திருடப்பட்டப்பட்டதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்தது. முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தரவுகளை வைத்தே வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதை ராகுல் காந்தி சுட்டிக்…