Author: Editor TN Talks
இந்தியாவுக்கு அதிக வரியை அமெரிக்கா விதிக்க பிரதமர் மோடி தான் காரணம் என திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது அதிக வரி விதித்ததற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம் என ஆ.ராசா பேசியுள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பி ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியாவை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விற்பதாக தெரிவித்துள்ளார். அப்படி அவர்கள் விற்கும் இந்தியாவை அம்பானியும், அதானியும் வாங்குவதாக குற்றம்சாட்டிய அவர் அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவீத வரியை விதிக்க இதுவும் ஒரு காரணம் என கூறியுள்ளார். மேலும் இந்தியா மீதான வரி விதிப்பை டிரம்ப் போடவில்லை என்றும் வரியை விதிக்க…
திருச்சுழி தொகுதியில், ஏதோ சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது தெரியாமல் அஇஅதிமுக கூட்டம் பக்கம் வந்த திமுக காரை மறித்து அஇஅதிமுக-வினர் தாக்கியதாக திமுக-வினரும், சில ஊடகங்களும் பொய்யை செய்தி போல் பரப்பி வருகின்றனர். உண்மை என்ன? 1.மாற்றுப் பாதை இருப்பதை காவல்துறை தெரிவித்தும், வேண்டுமென்றே கூட்டத்திற்குள் நுழைந்தது அந்த திமுக கார். 2.காரை ஒட்டியது யார் தெரியுமா? எந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொன்னார்களோ, அந்த சிறுவன் தான்! இதை எப்படி எடுத்துக் கொள்வது? லைசன்ஸ் இல்லாத ஒரு சிறுவனை வைத்து கூட்டத்திற்குள் காரை விட்டு விபத்து ஏற்பட்டு இருந்தால், யார் பொறுப்பு? இதையெல்லாம் அறிந்தே, மக்கள் பாதுகாப்பிற்காக தான் காரை மறித்தனர் அஇஅதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும். எந்த அளவிற்கு தில்லு முல்லு வேலைகளை செய்து எழுச்சிப் பயணத்தை முடக்கிட இந்த விடியா ஸ்டாலின் அரசு முயற்சிக்கிறது என்பதற்கு இதுவும் சாட்சி! காரியாபட்டியில் திமுக காரிடம் இருந்து…
புதுச்சேரி மாநிலத்தில் சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றும் எனவே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுத்தமான குடிநீர், மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்காகத் தான் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு, அவர்களுக்கு வீட்டிற்கே குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தை பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் ஒருசில சட்டமன்ற தொகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அரியங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய்திட்டு (தென்கை திட்டு) மற்றும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் மண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது. தேங்காய்திட்டு பகுதியில் உள்ள…
செப்டம்பம் 5-ந் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 17-ந் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள் – மரங்களிடையே கூட பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதிமுகவிற்குள் கடந்த சில…
தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காமல் அடம்பிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து 4 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை எம்பி சசிகாந்த் கைவிட்டுள்ளார். மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.2.152 கோடி கல்வில் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த சூழலில் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து, ஆகஸ்ட் 29ம் தேதி முதல் திருச்சி எம்பி சசிகாந்த செந்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்வந்தாக சசிகாந்த் கூறி வந்தார். மருத்துவமனையில் அவரை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வரும் குடியரசு தலைவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் 12.10 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1.35 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கும் குடியரசு தலைவரை ஆளுநர் ஆர்.என். ரவி உபசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை திருச்சி மார்க்கமாக திருவாரூர் செல்லும் குடியரசு தலைவர், நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். குடியரசு திரவுபதி முர்முவின் இந்த பயணத்தால் சென்னை, திருச்சி விமான நிலையங்கள்,…
Chennai High Court: உத்தரவை அலட்சியப்படுத்திய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விருகம்பாக்கம், லம்பேர்ட் நகர் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தாமஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விதிமீறல் கட்டிடங்களாஇ சீல் வைக்க உத்தரவிட்டது. ஆனால், இதை மாநகராட்சி அலுவலர்கள் செயல்படுத்தவில்லை. இந்த விழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன், விதில்மீறல் கட்டிடங்கள் தொடர்பாக 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததை சுட்டிக்காட்டினர். உத்தரவை செயல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கொடுத்த நீதிபதிகள், குறிப்பிட்ட காலத்தில் உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால், சென்னை மாநகராட்சி கமிஷ்னர், 10வது மண்டல நிர்வாகி பொறியாளர், கோடம்பாக்கம் நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடடிவைக்கை எடுக்கப்படும் என்றும் எதிர் காலத்தில் இதுபோல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம்…
MK Stalin: அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள விண்டேஜ் கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாற்றும்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அங்குள்ள தொழிலபதிபர்களுக்கு அழைப்புவ் விடுத்தார். அதன்படி ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலீடுகள் தொடர்பான உரையை முடித்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் உள்ள விண்டேஜ் கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார். அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் அவர் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு வந்துள்ள பயணத்தில் உலகின் முதல் காரையும், புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்த்து மகிழ்ந்தேன். காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் சர்ச்சை குறித்து நடிகை அம்மு வீடியோ வெளியிட்டுள்ளார். நீயா நானா நிகழ்ச்சியை தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம், தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நடிகை அம்மூ ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலர் ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நிறைய தவறான வார்த்தைகளை நீங்க யூஸ் பண்ணுறீங்க. அதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு நான் இந்த வீடியோ போடல. நீயா நானாவில் என்ன நடந்துச்சு என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் என்பதற்காக தான் இந்த வீடியோ. நீயா நானா என்பது ஒரு ஷோ. ரெக்கார்டு பண்ணின ஒரு விஷயத்தை வெறும் 45 நிமிஷம் எடிட் பண்ணி போட்டு இருக்காங்க. நீயா நானா நிகழ்ச்சியின் எடிட் பண்ணாத வெர்ஷன் பார்த்தீங்கன்னா என்ன நடந்துச்சு…
சென்னையில் போலீஸ் பாதுகாப்பை மீறி பிள்ளையார் சிலை எடுத்து சென்ற நடிகர் உட்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. ஒருவாரம் அக்டந்த நிலையில் இந்த சிலைகளை சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர். அந்த வகையில் நேற்று காலை 10 மணி முதல் ஆயிரக்கணக்கான சிலைகள் போலீசாரின் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக சென்னை திருவல்லிகேணி ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் முள்வேலி வைத்து, தடை செய்யப்பட்ட வழித்தடத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். விநாயகர் ஊர்வலம் முடிந்த பின்பு இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் தடுப்பையும் மீறி, கையில் சிலை ஏந்தி அனுமதி மறுக்கப்பட்ட இடம் வழியாக சிலையை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி…