Author: Editor TN Talks
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பேத்திக்கு மருதமலை கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் !!! கோவை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், அவரது பேத்தி காவினிக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுதல் படி, அவரது மகன் சுகுந்தன் – திவ்யா தம்பதியினரின் மகள் காவினிக்கு மருதமலை கோவிலில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றினார். இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் வழிபாடுகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜனை அப்பகுதி பக்தர்கள் சந்தித்து வாழ்த்தினர்.
குற்றப்பத்திரிக்கையில் காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப பிரச்சினை தொடர்பாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐக்கிய அரபிய நாடுகளில் பணியாற்றும் திருவாரூரை சேர்ந்த பன்னீர்செல்வம் பிரதீபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வலங்கைமான் போலீசார், பன்னீர்செல்வம் பிரதிபனுக்கு எதிராக லுக் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த நோட்டீசை எதிர்த்து பன்னீர்செல்வம் பிரதிபன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடை உத்தரவை மீறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும்…
கோவை, கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப் பள்ளியில் பணி புரியும் இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, குறித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், பள்ளி நிர்வாக காரணங்களையும் கருத்தில் கொண்டு கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிய பலர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதன்படி, விவசாயப் பிரிவு ஆசிரியர் செல்வராஜ் வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்…
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட சுற்றுப்பயணம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியான உள்ள அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் மூன்று கட்டத்தை முடித்துள்ளது. அவரது 4-ம் கட்ட சுற்றுப்பயணமானது, செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 1.9.2025 முதல் 13.9.2025 வரை, நான்காம் கட்டமாக கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 1-9-2025 (திங்கள்) – திருப்பரங்குன்றம்,…
தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான கார்டியன் என்ற ஹாரர் திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வந்தாலும், முன்பு இருந்ததைப் போன்ற வெற்றி படங்களை அவரால் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில் சினிமாவில் உட்சத்தில் இருந்தப் போது சோகைல் கதுரியா என்பவரை காதலித்து 2022-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்தும் வருகிறார் ஹன்சிகா. இந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ஹன்சிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஏற்கனவே சோகைல் ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,…
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனிலுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கெண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 253.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளவேனில், உலகக் கோப்பை போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியவர். ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் அவர் கைப்பற்றிய 2-வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளவேனிலுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” 2025 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற…
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின், குழந்தைகளின் கல்வி செலவை திமுக ஏற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேப் போல வரும் 25-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் க்டல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனக் கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…
இளைஞர்கள் நேரடி அரசியலுக்கு வரவேண்டும்.. ஐநா மாநாட்டில் சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அழைப்பு
இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அல்ல என்றும் இன்றைக்கான தலைவர்கள் என்றும் சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் போது மட்டுமே அரசியல் கட்சிகளால் இளைஞர்கள் நினைவுகூரப்படுகிறார்கள், இது ஜனநாயகத்திற்கான துரோகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு மையத்தின் சார்பில் 5-வது சர்வதேச இளைஞர் மன்றத்தின் விழா நடைபெற்றது. கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது.. நான் தமிழ் நிலத்தில் இருந்து வருகிறேன். எங்கள் பெருநிலத்தின் வரலாறு மன்னர்களின் வெற்றிகளால் எழுதப்படவில்லை. மாறாக புலவர்களின் கவிதைகளாலும், புரவலர்களின் ஆரவாரமற்ற கொடையாலும் எழுதப்பட்டுள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள்பாரியின் கதை உங்களுக்குத் தெரியும். ஒரு சங்கப்பா இவ்வாறு…
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் விஜய் சரமாரியாக சாடியுள்ளார். மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய், வழக்கம் போல திமுகவையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்காமல் மனசாட்சி இல்லாமல் சிறந்த முதலமைச்சர் என எப்படி கூறிக் கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். அதாவது, பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்பு பலூன் விட்டு GO BACK MODI எனக் கூறுவது; ஆட்சிக்கு வந்த பிறகு வாங்க மோடி என குடை பிடித்துக் கொண்டு கும்பிடுபோடுவது. இதுமட்டுமா? ரெய்டு வந்தவுடன், முன் எப்போதும் இல்லாத அளவு, இங்கு ரெய்டு நடக்கும் போது, செல்லாத ஆட்கள் எல்லாம் டெல்லி சென்று…
மதுரையில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி வைரலாகி வருகிறது. மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், வழக்கம் போல ’குட்டி ஸ்டோரி’ ஒன்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருப்பதற்காக ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளோடு ஒரு 10 பேர் செலக்ட் ஆகுறாங்க. அதில் ஒருவரை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். எனவே அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அந்த 10 பேரிடமும் விதை நெல்லை கொடுத்து அதனை நன்றாக வளர்த்துக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி 3 மாதங்கள் கழித்து வாங்க என்று கூறி அனுப்பி வைக்கிறார். 3 மாதம் கழித்து வரும்போது அதில் ஒருவர் ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். ஒருவர்…