Author: Editor TN Talks

பாஜகவுடன் கூட்டணி வைக்க நாம் என்ன ஊழல் கட்சியா? என மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 1.5லட்சம் பேருக்கு இருக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதனையும் தாண்டி லட்சக்கணக்கில் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். இந்த நிகழ்ச்சியில் தனது முதல் தேர்தலை தவெக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது குறித்து விஜய் விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கூட்டணி குறித்து விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கூட்டணி குறித்து பேசிய அவர், ”சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான். நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி…

Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அடுத்த பாரபத்தியில் நடைபெற்றது. இதற்காக வரலாறு திரும்புகிறது என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரது உருவப்படங்களுடன் விஜய் நிற்பது போன்று மாநாட்டு மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. ‘பெரியாரின் பேரன்’ என்ற பின்னணி வரிகள் முழங்க பாடல் ஒலித்தது.பிற்பகல் 3 மணியளவில் மாநாட்டு திடலுக்கு விஜய் வருகை தந்தார். மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு விஜய் மலர் தூவிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார். பின்னர் மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களுக்கு கை காட்டியபடி ராம்ப் வாக்கில் நடந்து வந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் ராம்ப் வாக்கில் தடுப்புகளை தாண்டி ஏறி ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள்…

Read More

தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. முதன் முதலாக களம் காணவுள்ள விஜய்யின் தவெக கட்சியும் பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு மிகவும் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போவதாக அவர் கூறிய அடுத்த நொடி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்பரிக்கத் தொடங்கினர். அடுத்த நொடி, ”அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தான் மட்டும் தான் போட்டியிடுவதாக…

Read More

பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கியமான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019-ஆனது அதன் 54வது பிரிவில் திருத்தம் கோருகிறது. அதன்படி பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறை வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,…

Read More

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகியதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகிஷ் சர்மா கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்திருப்பதாகவும், 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டு அவர் செயல்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் ரோகித் சர்மாவுக்கு 40 வயது ஆகிவிடும் என்பதால், அவர் அதற்கான அணியில் இடம் பிடிப்பது…

Read More

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற சுதர்சன் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த மாதம் 4-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தார். இந்தியா கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேப் போல மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், திட்ட கமிஷன் முன்னாள் தலைவர் முங்கேசர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது. டெல்லியில்…

Read More

நடிகர் அர்ஜூனின் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பசூர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக நடித்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜூன். இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார் அர்ஜூன். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அப்பா-மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், இப்படத்தின் மூலம் கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பசூர் தமிழில் அறிமுகமாகிறார்.

Read More

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை சக நண்பர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த இளைஞர் விஜய். 22 வயதான இவர் தனது நண்பர்களான முத்துக்குமார், சஞ்சய், முத்துகவுதம் ஆகியோருடன் சேர்ந்து தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் வைத்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், முத்துக்குமார், முத்து கவுதம், சஞ்சய் ஆகிய 3 பேரும் விஜய்யை உருட்டு கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றியதோடு, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முத்துக்குமார், முத்து கவுத, சஞ்சய் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

ஆப்கானிஸ்தானில் அகதிகளுடன் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 79 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்தது. இதனால் தலீபான்கள் கை ஓங்கிய நிலையில், அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் மீண்டும் அங்கு தலீபான்கள் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. தலீபான்களின் கிடுக்குப்பிடி ஆட்சி அதிகாரத்துக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், துருக்கி, அரபு அமீரகத்துக்குள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அந்த நாடுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் தடாலடியாக வெளியேற்றப்பட்டனர். அதேப் போல ஈரானில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சிலர் நேற்று பேருந்து மூலம் நாடு கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெரத் அருகே அப்பேருந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற…

Read More

’நீ அரியணை ஏறும் நாள் வரும்’ என தனது மகனுக்கு அவரது தாய் சோபா வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறவுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு இரவு 7.25 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான அணைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவு முதலே மதுரையில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், விஜய்க்கு அவரது தாய் சோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது.. மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம்…

Read More