Author: Editor TN Talks
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மம்முட்டி டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் மம்முட்டி, உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் முதல் சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வரும் அவர் மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதனை மலையாள சினிமா சங்கம் முற்றிலும் மறுத்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களாக ஓய்வில் இருந்த மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலை சென்று பிரார்த்தனை செய்திருந்தார். இந்த நிலையில், மம்முட்டி உடல்நலம் தேறி விட்டதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். மம்முட்டியுடனான புகைப்படத்தை மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து மலையாள சினிமா நடசத்திரங்கள் பலரும் மம்முட்டியின் வரவை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். மம்முட்டியின் உடல்நிலை தொடர்பாக அவரது நண்பரும், எழுத்தாளருமான வி.கே. ஸ்ரீராமன், “சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில்,…
தேசிய தடகள போட்டியில், தமிழ்நாட்டின் தமிழரசு மற்றும் தனலட்சுமி ஆகியோர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்புக்கான அணித் தேர்வு போட்டியாகவும் இது அமைந்திருப்பதால், வீரர்களின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். 100 மீட்டர் ஓட்டத்தில் இருபாலரிலும் தமிழகம் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் சீறிப்பாய்ந்தனர். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய திருச்சியை சேர்ந்த 26 வயதான தனலட்சுமி 11.36 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான நெல்லையைச் சேர்ந்த அபிநயா வெள்ளிப்பதக்கமும் (11.58 வினாடி),…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,665 காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செயப்படவுள்ளன. இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். நவம்பர் 9-ம் தேதி தேர்வு தொடங்கப்படவுள்ள நிலையில், நாளை முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என…
அஜித்குமார் கொலை வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நகை திருட்டு புகாரில் சிவகங்கையை சேர்ந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரமாக சி.பி.ஐ. விசாரித்தது. நேற்று குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று வந்தது. வழக்கை விசரித்த நீதிபதிகள், “நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் கொலை வழக்கில் தடய அறிவியல் சோதனை…
மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் தவெக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 506 ஏக்கர பரப்பளவில் 1.5லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வோருக்காக சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர், பெண்களுக்கான பிங்க் ரூம் வசதி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மாநாட்டின் முகப்பில் தவெகவின் கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்களுடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதேப் போல மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் முன், விஜய் அக்கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 100 அடி கொண்ட கொடி கம்பம், ராட்சத…
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கப்பட்ட நிகழ்வு, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேப் போல பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய…
மதுரையில் நடைபெற்று வரும் நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாட்டுக்காக பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதமுள்ள பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தவெக மாநாட்டிற்கான பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை காளீஸ்வரன் என்ற இளைஞர் செய்து வந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவர், பேனர் அமைக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என வாதிடப்பட்டது. மாநகராட்சியின் நடவடிக்கையால் 2000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர்…
துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன். துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர், உடல்நிலைக் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 9-ம் தேதி துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், கோவையை சேர்ந்தவருமான சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கான நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி கட்சி எம்.பி.,களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்”…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரங்களில் வேண்டுமென்றே கவனத்தை திசைதிருப்பும் வகையில் நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை கூட்டத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால், அதில் ஓட்டுநரே நோயாளியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். View this post on Instagram A post shared by TNtalks (@tntalksofficial) 2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி 10 மாதங்களுக்கு முன்னதாகவே பிரசார பயணத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி உள்ளது. கடந்த மாதம் கோவையில் இந்த பயணத்தை தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசின் அவலங்களை பேசி வருகிறார். அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று…