Author: Editor TN Talks
சென்னை ரிப்பன் மாளிகை வெளியே கிட்டத்தட்ட 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டட்னர். சென்னை பெருநகர மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், தனியார் நிறுவனத்தின் வாயிலாக கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் ரிப்பன் கட்டடம் முன்பு காத்திருப்பு போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக, தவெக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேப் போல திரைப்பட நடிகர், நடிகைகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உட்பட பலரும் 8கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில்…
யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். உலக யானைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”உலக யானைகள் தினத்தில், தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கினைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்! கோவையில், மத்திய வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் யானைகள் தின கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பைப் பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் இரயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், தெப்பக்காட்டில் யானைப் பாகர்களுக்கான கிராமத்தையும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இயைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளைப்…
அமெரிக்க விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்று தரைறங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியது. உடனடியாக சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நின்று கொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விமான விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்ததால், பயணிகள் அவதியடைந்தனர்.
ஆணவக் கொலைக்கு எதிராக விஜய் குரல் கொடுக்காதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளர். தொடர் ஆணவ படுகொலைகளை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வேண்டும். மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, அவரது தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும். இந்த ஆணவ படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இந்த படுகொலைகளை செய்யக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 40 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது.…
இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுவிட்டு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராதமாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும். எந்தவொரு மாநிலமும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்; வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால், புதிதாக எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலங்களில்…
கடவுள் ராமர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் அண்மையில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். அப்போது, அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என கூறியிருந்தார். வைரமுத்துவின் இந்த கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுவையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பாஜகவினர், வைரமுத்துவின் புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “சமீபத்தில் நடந்த திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து…
கல்லீரல் பாதிப்பால் அவதியடைந்து வரும் நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் பணம் கொடுத்து உதவியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபினய். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தவர், பின்பு டப்பிங்-கில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு அபினய் தான் குரல் கொடுத்திருந்தார். அதன் பின் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் வருமனத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அவர், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தான் அடைந்த துயரங்களை கூறி கவலை அடைந்தார். அதன் பின் தற்போது கல்லீரல் பாதிப்பால் அபினய் அவதியடைந்து வருகிறார். எலும்பும் தோலுமாய் அவரது புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அவர் அவதியடைந்து வந்துள்ளார். இதனையறிந்த சின்னத்திரை நடிகர் பாலா, அவரது நேரில் சந்தித்து ரூ.1லட்சம்…
10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 01.08.2025 முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த விளக்கம் பின்வருமாறு:- கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன், 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 155ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டு, 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை…
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி, ஏமாற்றிய திமுக அரசுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் திங்கள் கிழமைகளில் BLUE BAND அணியுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் தொகுதி வாரியாக திறந்தவெளி வேனில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு பிரசாரம் மேற்கொண்ட போது, ”இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, அவர்களை வஞ்சித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்த அரசாக இருக்கிறது ஸ்டாலின் மாடல் அரசு. இதற்கு எதிரான ஒரு Movement-ஆக, மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளை Blue Band அணியுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியிருந்தார்”. அதன் ஒரு பகுதியாக, கோவையில், அதிமுக சார்பில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், முன்னதாக ஆலோசனையில்…
பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும் என நெதன்யாகு கூறியுள்ளார். காசாவில் உள்ள ஹாமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே ஒரு ஆண்டு கடந்தும் போர் நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இஸ்ரேல் போரை நிறுத்துவதாக இல்லை. இந்த நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ”காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது. காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள். நிறைய வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பணயக் கைதிகளை விடுவித்து,…