Author: Editor TN Talks
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, வசனங்களையோ எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியினரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதி பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்தககொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், “எப்படி எல்லாம் ஜெயிக்க வேண்டும் எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். தற்போது கட்சி வளர்ச்சியை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தையோ,…
திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ சண்முகவே கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை – மகன் சரணடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரனுக்கு சொந்தமான குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னையை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி…
அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் பாமக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 2022-ம் ஆண்டு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும்…
அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்த தடையில்லை எனக் கூறியுள்ள நீதிமன்றம் சிவி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்துள்ளது. தமிழகத்தில் அரசு நலத்திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடைக்கோரி அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருப்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். இது 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தவறானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பான விசாரணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் திமுக, அதிமுக என இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசார விவாதத்தை முன்வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சி.வி.சண்முகம் தரப்பு மறுப்பு தெரிவிக்க, திமுக தரப்பில் பட்டியல் ஒன்று காண்பிக்கப்பட்டது. இவ்வாறு காரசார விவாதத்தின்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதிமுகவில் இருந்த தலைவர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விருதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முத்தரசன், “சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்ட…
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுகவிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் அடிக்கடி பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் அதிருப்தி அடைந்தவர்கள் கட்சியை விட்டு விலகி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தொண்டைமான் இன்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 2012 ல் புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் கார்த்தி தொண்டைமான். அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது கட்சியினரையே அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. கடந்த ஜூலை 21-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது முன்னாள் எம்.எல்.ஏவும் திமுகவில்…
டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகைகளை பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி., சுதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் எம்.பி., சுதா. கடந்த 4-ம் தேதி நாடாளுமன்ற குடியிருப்புப் அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மர்ம நபரிடம் இருந்து செயினை காக்க போராடியும் முடியவில்லை. அந்நபர் சுதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4.5சவரன் செயினை பறித்துச் சென்றார். இதில் எம்.பி., சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் சாணக்யபுரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.1கோடி நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன். இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழிவு பகுதியில் தென்னை மரத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்தத் தோட்டத்தை மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் சேர்ந்து பராமரித்து வந்துள்ளார். தோட்டத்தில் பணியாற்றி வந்த மூர்த்தி மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார், சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடியவர்களை தேட…
சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 73 பயணிகள் பயணிக்க இருந்தனர். ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட தயாராக இருந்தப் போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக கண்டறிந்த விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு, 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் 6.45 மணிக்கு திருச்சி புறப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர். மனுதாரர்கள் சார்பில்…