Author: Editor TN Talks
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்னும் அதன் அடிப்படைப் பணிகளைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் திமுக அரசுக்கு துளியளவும் இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன. இதுதொடர்பாக அன்புமணி விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் நாளுடன் குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டன.…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்தி அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சரியாக சென்று தெரிகிறதா என கண்காணித்து அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அதன்படி கடந்த ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை ஓய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை,திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தி அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் ரூபாய் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு உள்ள கோவை வடக்கு, தெற்கு பதிவுத்துறை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கருமத்தம்பட்டியில் உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டன. பதிவுத் துறை வாயிலாக பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை தங்களின் பெயரில் பதிவு செய்தல், திருமணங்களைப் பதிவு செய்தல், அங்கங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்துறையின் செயல் திறனை மேலும் விரிவாக்கும் வகையில் அரசு புதிய அலுவலகங்களை கட்டுதல், காலிப் பணி இடங்களை நிரப்புதல், உட்கட்ட அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2023 – ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் பதிவு மாவட்டம், நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் (வடக்கு) பகுதியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட பதிவாளர், மாவட்ட பதிவாளர் தணிக்கை மற்றும்…
2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! .இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது! இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. “இது மிக உயர்ந்த…
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்துள்ளனர். தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாபன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உட்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் குடிமங்கலம் பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த தந்தை-மகனுக்கு இடையே எழுந்த பிரச்சனையில் தந்தை மகனை கொல்ல அறிவாளுடன் துரத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவசர உதவி என் 100க்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அரிவாளுடன் சுற்றிய அந்நபரை பிடிக்க முயன்ற போது, அவர் சண்முகவேலின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்தோடு இல்லாமல், அந்த தந்தை, தனது மகனையும் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அங்கு சண்முகவேலை வெட்டி கொலை…
பூம்புகாரில் நடைபெறவுள்ள பாமகவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10 – 2025 அன்று நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன். பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ – நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும்; இந்த மகளிர் மாநாடு; அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும். கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில்; வன்னியர் சங்கம் சார்பில், என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரமாண்ட திருவிழாவில்; பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே – உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்து கொண்டிருப்பேன். உங்கள்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆறுகள், அணைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் 4மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாத இறுதியில் மழை பெய்ததில், கேரளாவில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கேரளாவில் நேற்று நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனை முன்னிட்டு 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கு கூடுத்லாக மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேப் போல எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக மேலும் 3 மாவட்டங்களுக்கு அரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களின்…
வார இறுதி நாட்களில் சென்னை கிளாஅம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், வரும் சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை, 55 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது…
இந்தியாவிலிருந்து பிலிப்பைன்ஸ்க்கு நேரடி விமான சேவை இயக்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவர் பெரிண்டோ மார்கஸ் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த மார்கசை இந்திய அதிகாரிகள் வரவேற்று, குடியரசு மாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மார்கஸ், தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் போது கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெஇ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்பின் பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவித்தார்.