Author: Editor TN Talks
மாநில திருநங்கையர் கொள்கையை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025 கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டி, நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஏழாவது மாநிலமாக, தமிழக அரசு இந்த கொள்கையை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது என்று கூறி நீதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். திருநங்கைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும், திருநங்கைகளுக்கு என உள்ள பிரத்யேக செயலியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதி தள்ளி வைத்தார்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை, கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது. பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக…
தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, மாணவரின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், கல்லூரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவிர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி,…
உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை எனக் கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்த உச்ச…
அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து இயங்கும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்காக மாற்றி இயக்குவதையும், Red Taxi நிறுவனம் விதிகளை மீறி வாகன மேல் கூரையில் சிவப்பு வண்ணம் பூசி விளம்பர…
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இத்தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்திருந்தது. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. 4-அது நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் எடுத்தது.…
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் சிபிஎம் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்ட தொகை வழங்காத நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் தற்போது வரை அந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கான உரிய…
புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபட்டு புழல் சிறையில் உள்ள தம்மை தனி சிறையில் வைத்து கொடுமை செய்வதாகவும், அடிப்படை தேவைகளான சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறையில் சரியான நேரத்திற்கு கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனவும், சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகவும், முறையான மருத்துவ வசதி இல்லை என்றும், சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்த தம்மை தனி சிறையில் வைத்து சித்தரவதை செய்வதாகவும், தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும்,…
எவரெஸ்ட் சிகரம் எட்டிய மாணவர் ஆஷிஷ்-ஐ, வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கி உள்ளது. வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், எவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கௌரவித்தது. இந்த விழாவில், இந்தியாவின் இளைய சதுரங்க திலகமாக வலம் வருகிற கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலம்மாள் நெக்ஸஸ் துணை நிர்வாகி ஸ்ரீராம் வேல்மோகன், குகேஷ் முன்னிலையில் ஆஷிஷ்க்கு ₹40 லட்சம் மதிப்புள்ள ரொக்க பரிசை வழங்கினார். ஆஷிஷ் மற்றும் குகேஷ் இருவரும் வெலம்மாள் ஹாலுக்கு பிரமாண்டமான வரவேற்புடன் நுழைந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு இடையில் சில புதுமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன்கள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் தருணங்கள் நிகழ்ந்தன. மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாக, ஆஷிஷின் தந்தையின் குரலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI)…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்…