Author: Editor TN Talks
தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நடிகை தனுஸ்ரீ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ”தீராத விளையாட்டு பிள்ளை” படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ME TOO இயக்கத்தில் குரல் கொடுத்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஜூலை 25, 2025 அன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் Me Too விவகாரத்தில் பேசிய பிறகு, என்னைச் சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணர்கிறேன்,” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். ”தனது காரில் பிரேக் செயலிழப்பு மற்றும் உணவில் விஷம் கலக்க முயற்சி போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் செல்வாக்கு மிக்க சிலர் இருக்கலாம்” என்று அவர் குற்றம்சாட்டினார். 2018-ல் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது…
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 பேரை இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையினர் ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அந்த வகையில் டாடா கன்சல்டன்சி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் லட்சகணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் கூறுகையில், “டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள்…
வார விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கவுள்ளது. கடந்த 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போன்றவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது. தொடர்ந்து மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்னைகள் குறித்து 28-ம் தேதியில் இருந்து விவாதத்தை தொடங்க எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன. மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் விவாதம் தொடங்குகிறது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆளுங்கூட்டணி தரப்பில், மத்திய…
இந்தியாவில் இந்தாண்டு மட்டும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மானசா தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டில் இந்தியாவில் கும்பமேளா, ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டம், கோயில் நிகழ்ச்சிகள் என பல இடங்களில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, 1. ஜூன் 4, 2025: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி, தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சி ஒரு அசம்பாவிதமாக மாறியது. சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.…
நெல்லையில் ஒரு பெண்ணை காதலித்த இருவருக்கு ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று காலை இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார் என்பதும், சென்னை ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது. கவின்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார் கவின்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். தொடர்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தனருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை, ஜகதீப் தன்கர் வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 21ல், பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளே, குடியரசு துணை தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த அவர், கூட்டத்தொடரின் முதல் நாளில் வழக்கம் போல சபை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், அன்று இரவே திடீரென ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜக்தீப் தன்கரின் ராஜினாமா முடிவின் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விஜயபுரா என்ற…
தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ’இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதிலும், இயக்குவதிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’குபேரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தமிழில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 4-வது திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள இப்படத்தில், தனுஷ் எழுதி ஸ்வேதா மோகன் குரலில் உருவாகியுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் முதலமைச்சர் இன்று மாலை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி வழக்கம் போல் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், உடனே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்தபடியே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார். முதலமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதால், ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில், அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து 7வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய பெண் பக்தரின் கால் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணகான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று காலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. காலை முதலே கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம் பாலையத்தை சேர்ந்த சீனிவான் – ராஜாமணி தம்பதி உறவினர்களுடன் கோயிலுக்கு வந்துள்ளனர். கடலில் நீராடிய போது, ராஜாமணியை ராட்சத அலை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் அவரது கால் கடலுக்குள் இருந்த பாறையில் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பணியில் இருந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார், ராஜாமணியை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அருவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறியுள்ளார். உடனடியாக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.