Author: Editor TN Talks
”டகோயிட் : எ லவ் ஸ்டோரி” என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர், நடிகைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு நடிகரான ஆதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆக்சன் கலந்த காதல் படம் டகோயிட் : எ லவ் ஸ்டோரி. இப்படத்தில் ஆதிவி சேஷூக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார். ஆனால் கூலி படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால், இப்படத்திற்கு தேதி கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக இப்படத்தில் மிருனாள் தாகூர் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதில் அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்பட படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், ஆத்வி சேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேப் போல்,…
கோவாவின் புதிய ஆளுநராக கஜபதி ராஜூ இன்று பதவியேற்கிறார். கோவா மாநில ஆளுநராக செயல்பட்டு வந்தவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை. இவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய ஆளுநராக அசோக் கஜபதி ராஜூ செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 74 வயதாக அசோக் கஜபதி ராஜூ, கோவாவின் புதிய ஆளுநராக கஜபதி ராஜூ இன்று பதவியேற்கவுள்ளார். ஜகபதி ராஜூவுக்கு கோவா உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கஜபதி ராஜு 2014 முத்ல 2018 வரை மத்திய விமானபோக்குவரத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். அதேபோல், ஆந்திர அமைச்சர் சபையில் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் முலம் இன்று இரவு 7.50மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கவுள்ளனர். ரூ.452கோடி செலவில் விரிவாக்கம் செயப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான விழா இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது. பின்னர் விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலை துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.…
திருவள்ளூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்த நபர் ஒருவர் சிறுமியின் வாயை அடைத்து, தூக்கி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த மாந்தோப்புக்குள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே நேரம் குற்றவாளியை கைது செய்ய 30 தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரயில்…
திருவள்ளூரில் 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று கடத்தியுள்ளார். அருகேயிருந்த மாந்தோப்புக்குள் சிறுமியை தூக்கிச் சென்றவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில் 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. ஆந்திர மாநில சூலூர் பேட்டையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்நபரின் புகைப்படத்தை சிறுமிடம் காட்டிய போது, அவர் தான் குற்றவாளி என்பதை சிறுமி உறுதிப்படுத்தினார். அதனை தொடர்ந்து அந்நபரை கைது…
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரில் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 7.9கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் என மொத்தம் 65.2லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு தீவிர திருத்தம் (#SIR) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது. எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும்…
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பீகாரில் இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்துள்ளது. அதனடிப்படையில், பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 64லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் 65லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வாக்காளார்கள் நீக்கமாக இது பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப் போர்டில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1ஓவர்களில் 358 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 225 ரன்கள் அடித்திருந்தது. தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 31 ரன்கள் எடுத்திருந்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13,290 ஆக உயர்ந்தது. இதன் மூலம்…
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரை நடைபெற்ற 3 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமராக மோடி தொடர்ந்து வருகிறார். அப்படி பார்த்தால் இன்று வரை பிரதமராக அவர் 4,078 நாட்களை கடந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நீண்ட நாள் பிரதமர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1966ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமராக இருந்ததே சாதனையாக இருந்தது. அவருக்கு பிறகு மோடி இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக 2-வது நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த முதல் பிரதமர். காங்கிரஸ் கட்சியை சாராத பிரதமராக நீண்ட காலம்…
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கமல்ஹாசன், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். மாநிலங்களவைத் தலைவர் முன்னிலையில், அவர் தனது உறுதிமொழியைத் தமிழில் வாசித்தார். கமல்ஹாசனின் பதவியேற்பு, நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் இந்த நிகழ்வு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.