Author: Editor TN Talks
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், இரு கட்சிகளும் இந்த அழைப்பை நிராகரித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சிதான் அமையும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாஜகவினரின் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், தமிழக மக்களின் விருப்பப்படி ஒற்றைக் கட்சி ஆட்சி முறையே அமையும் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக்…
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது. முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக்…
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் கலையாக உள்ள 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இத்தேர்வை 13.48லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் அடங்கிய விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்ப பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அஞ்சல், மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின்…
நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தொழிலதிபராக மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ’சுல்தான், வாரிசு’ படங்கள் மூலம் தமிழில் ஃபேமஸ் ஆனார் ராஷ்மிகா. அதற்கு முன்னதாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ’டியர் காமரேட்’ என்ற படத்தில், ”இங்கி, இங்கி இங்கி காவாலே” என்ற பாடல் மூலம் நேஷனல் கிரஷாக மாறிப் போனார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பான் இந்தியா படங்களான புஷ்பா 1, புஷ்பா 2, படம் மூலம் பான் இந்தியா நடிகையானார் ராஷ்மிகா. குறைந்த காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகியுள்ளார் ராஷ்மிகா. இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.60கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது தாயாருடன் வீடியோ காலில் உரையாடிய ராஷ்மிகா, ”இன்று நான் ஒரு மிக…
இந்திய கிரிக்கெட் வீரரான சர்பராஸ் கான் கிரிக்கெட்டுக்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் சர்பராஸ் கான். அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் கடந்த நியூசிலாந்து தொடரில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் துவண்டு போகாத சர்பராஸ், கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கு அவரது உடலமைப்பும் காரணம் எனக் கூறப்பட்டது. உடல் எடை அதிகம் இருந்ததால், ரன் எடுப்பதற்கு சிரமம் ஆகலாம் என நிர்வாகத்தினர் தயக்கம் காட்டினர். இதனால் கிடைக்கும் நேரத்தில் தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய அவர், கடின உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது முயற்சியின் வெற்றியாக தற்போது பிட்டாக…
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அடுத்து அந்த பதவிக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், ”பதவி காலத்தில் இந்திய குடியரசுத் தலைவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமருக்கும், அமைச்சர் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக தன்கர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த மாநிலங்களை தலைவராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய உறுப்பினர்கள் உள்ளனர். சர்ச்சைகளில் சிக்காத ஒருவர் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.,யான ஹரிவன்ஷ்…
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக சார்பில் ”உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சி சென்ற முதலமைச்சருக்கு லேசாக தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலை 10.40மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் குடும்பத்தினர், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
2026-ம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 10 மாதங்களே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. பிறகு பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பின் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. முன்னதாக தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், விஜய் இவர்களோடு சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.…
நடிகர் சூர்யா நடித்து வரும் ’கருப்பு’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கருப்பு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் ஆ.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’கருப்பு’ படதிதின் டீசர் சூர்யாவின்…
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகர்கள் இது குறித்தான விளம்பரத்தில் நடிப்பதற்காக பெரும் அளவிலான கமிஷனை பெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஐதராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்…