Author: Editor TN Talks

மறைந்த சிவாஜி கணேசன் விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை தான் நாங்கள் சுவாசிக்கிறோம் என அவரது மகனும் நடிகருமான பிரபு கூறியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் அவரது சிலைக்கு அவரது மகன் பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு மற்றும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு இருவரும் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, “சிவாஜி கணேசன் நம்மை விட்டுச் சென்று 24 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது ரசிகர்களை பார்க்கும் போது அவர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது.…

Read More

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம்பெற பிராத்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபயணத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பலோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பூரண குண்மடைய வேண்டும் என என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிராத்திப்பதாக” தெரிவித்துள்ளார்.

Read More

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிறந்தநாளை ஒட்டி, தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இன்று தனது 84-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய மக்களுக்கான உங்கள் தலைமை, உறுதி மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் உத்வேகம் அளிக்கிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,…

Read More

பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்தில், இண்டர் மியாமி அணி, எ.ஒய் ரெட் புல்ஸை 5-1என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம், புகழ்பெற்ற அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தினார். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் மெஸ்ஸி. ரெட் புல்ஸூக்கு எதிராக இரட்டை கோல்கள் அடித்ததன் மூலம், பெனால்டி அல்லாத 764 கோல்கள் அடித்து இந்த சாதனையை அவர் எட்டினார். ரொனால்டாவை விட ஒரு கோல் அதிகம் அடித்து மெஸ்ஸி முதலிடத்தை பிடித்துள்ளார். 38 வயதாகும் மெஸ்ஸி 874 கோல்களும், ரொனால்டோ 938 கோல்களும் அடித்துள்ளனர். ஆனால் மெஸ்ஸி, ரொனால்டாவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளார்.

Read More

2006-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் 19 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது பயங்கரவாத தடுப்புப் படை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரை நேபாள எல்லை வழியாக மும்பைக்கு அழைத்து வந்துள்ளார் கமல் அகமது அன்சாரி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவர், ஒரு ரயிலில் வெடிகுண்டை வைத்துள்ளார். அது மதுங்கா ரயில் நிலையத்தில் வெடித்தது. முகமது பைசல் ஷேக் என்பவர் பயிற்சி பெறுவதற்காக 2 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அத்துடன் மேலும் சில இளைஞர்களை பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளார். குண்டு வெடிப்பை நிகழ்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். ஹவாலா வழியில் பணத்தைப் பெற்றுள்ள இவர், ஒரு ரயிலில் வெடிகுண்டை வைத்துள்ளார். அது ஜோகேஷ்வரி என்ற இடத்தில் வெடித்தது. வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பில்…

Read More

அதிமுகவும் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது ஜானகி அணிக்கு சென்றார் அன்வர் ராஜா. 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 2014 முதல் 2109 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருந்து வந்த அன்வார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிருப்பதியில் இருந்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என பேசியிருந்தது பேசுபொருளானது. பாஜகவுன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி இருக்கிறார் அன்வர் ராஜா. அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற தகவல் வெளியான நிலையில் அவரை அதிமுக…

Read More

பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயண செல்கிறார். இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரின் அழைப்பை ஏற்று வரும் 23ம் தேதி பிரிட்டனுக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்ைப மேம்படுத்துவது குறித்து கெயர் ஸ்டார்மருடன் அவர் ஆலோசனை நடத்துவார். மோடியின் பயணத்தின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன. மேலும் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸையும் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நான்காவது முறையாக பிரிட்டனுக்கு செல்ல உள்ளார். இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி மாலத்தீவுக்கு செல்கிறார். 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அங்கு அவர் சுற்று பயணம்…

Read More

2025-2026-ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஎச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டில் 597 இடங்கள் உள்ளன. பிவிஎஸ்சி – ஏஎச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 26ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடந்தது.…

Read More

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இனி இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் (20.07.2025) முடிவடைந்தது. இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்வதாக” கூறப்பட்டுள்ளது.

Read More

ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணத்தினர். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த விமானி, உடனே விமானத்தை மீண்டும் திருப்பதியில் தரையிறக்கினார். சுமார் 30 நிமிடங்களாக வானில் வட்டமடித்த விமானம், பிறகு திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதுடன் அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More