Author: Editor TN Talks
இன்று (ஜூலை 21, 2025) மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) முதல் மாநில அளவிலான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தவெக அழைப்பு விடுத்துள்ளது. தமிழக மக்களின் எதிர்கால நலனை மையப்படுத்தி, கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தவெக-வின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள், மற்றும் 12,500 கிளைகளில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் விஜய் கடைசி நேரத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த…
நாடளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனையொட்டி, டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்கத் தயார். ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றிய விவரங்கள் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இந்த தீர்மானத்தை முன்வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
சுரெஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன் அணியில் முன்னணி வீரர்களான தோனி, கோலி ஆகியோர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில், இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல்-டைம் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த அணியில், சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த அணி… 1. பிரையன் லாரா 2. சச்சின் டெண்டுல்கர் 3. விவியன் ரிச்சர்ட்ஸ்…
மார்க்சிஸ்ட் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய கருத்து, அவரது முதிர்ச்சியற்ற தனமையை காட்டுவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கேரளாவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இண்டியா கூட்டணியின் ஆதரவு கட்சிகளை தாக்கி அவர் பேசியிருந்தார். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருவதாகவும், அவர்கள் மக்களை பற்றி நினைப்பதில்லை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுலின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவெறி பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு…
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்கள் பட்டியலில் இருப்பவர் வெற்றிமாறன். இவரும், பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ’பேட் கேர்ள்’. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீசருக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இளம் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ‛யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இந்த நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்தான ஆபாச காட்சிகள்…
இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார், கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். வருடத்தில் 6 மாதங்களை சினிமாவுக்கும், 6 மாதங்களை ரேஸிலும் செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். அவரது குழுவினர் தொடர்ந்து பல கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றும் வருகின்றனர். குறிப்பாக துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3-வது இடத்தையும், பெல்ஜியத்தில் நடந்த பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தியிருந்தனர். அந்த வகையில் இத்தாலியில் நடைபெற்ற ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றிருந்த நிலையில், அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. பந்தயத்தின் போது அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால், அதன் மீது அஜித்தின் கார் மோதியது. இந்த விபத்தில்…
கேரளவில் நிலத்தகராறில் தம்பதியை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரீடம் நகரை சேர்ந்தவர்கள் கிறிஸ்டோபர்-மேரி தம்பதி. இவர்களுக்கும், வீட்டருகே வசிக்கும் வில்லியம்ஸ்-க்கும் இடையே நிலப்பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு 9.30மணியளவில் கிறிஸ்டோபரும், அவரது மனைவி மேரியும் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய வில்லியம்ஸ், கையில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தம்பதி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். தீ பற்றி எரிந்ததில் இருவரும் அலறி துடிக்க, அக்கம்பகத்தினர் இருவரையும் மீட்டனர். மேலும் படுகாயமடைந்த இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 60சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் தம்பதி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த எர்ணாகுளம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தம்பதியை எரித்துக்…
ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் இன்று, சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஐதீகப்படி, ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை தினங்கள் வரும் நிலையில், இன்று மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் ஆலயப் பிரகாரம் முழுவதும் நிரம்பி வழிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி கோயிலில் தேவஸ்தானத்தில் வேலை பார்த்த வேற்று மதத்தை சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருமலை-திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதாகும். தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் பணியாற்ற அனுமதியில்லை. வேற்று மதங்களை சேர்ந்தவர்களை பணியிடை நீக்கம் செய்வது அல்லது அவர்கள் கேட்டுக்கொண்டால் அரசு துறைக்குப் பணியிட மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வது என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தை பின்பற்றுபவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். 4 ஊழியர்களும் தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பணிபுரிந்த ஊழியர்களாக, தங்கள் கடமைகளை செய்யும்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து,…
டெல்லியில் இந்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ”வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறும் விசயங்களை கேட்டு, அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாம் நடக்க வேண்டியதில்லை. இறையாண்மை வாய்ந்த இந்த நாட்டில், அனைத்து முடிவுகளும் அதன் தலைமையால் எடுக்கப்படுகின்றன என்றார். நம்முடைய உள்நாட்டு விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுரை கூற பூமியில் வேறு எந்த சக்தியும் இல்லை. பிற நாடுகளுடன் இணக்கத்துடன் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒன்றாக வேலை செய்கிறோம். பரஸ்பர மதிப்பு மற்றும் தூதரக பேச்சுகளில் ஈடுபடுகிறோம். அமித்ஷாவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் கடிதம் ஆனால், நாம் இறையாண்மை கொண்டவர்கள். நம்முடைய சொந்த முடிவுகளை நாமே எடுப்பவர்கள் என்று பேசியுள்ளார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத…