Author: Editor TN Talks
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அது கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இதனை அவர் மறுத்தார். முஸ்தபா என்ற கேன்டீன் உரிமையாளர் அது தன்னுடைய பணம் என உரிமை கொண்டாடி வந்தார். விசாரணையில் அது அவருடைய பணம் அல்ல என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 30-ந் தேதி சிபிசிஐடி போலீசார் சூரஜ் என்ற ஹவாலா தரகரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சூரஜ் மனுதாக்கல் செய்திருந்தார்.…
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற ஜுலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதி குறுத்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்க உள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 அன்று மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி எனும் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான பந்தல்கால் நேற்று நடப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் கடிதம் அளித்துள்ளார். இம்மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை காவல்துறை கேட்கவுள்ளது. யார் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது, வேறு வி.ஐ.பி.க்கள் யாரும் பங்கேற்கின்றனரா, தொண்டர்கள் எவ்வளவு பேர் மாநாட்டுக்கு வரவுள்ளனர், எங்கிருந்தெல்லாம் வருவர், அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான நிறுத்துமிடம் உள்ளிட்டவை அடங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகளை மாவட்ட காவல்துறை கேட்கவுள்ளது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இதுவரை எவ்வித கூட்டமும் நடத்தப்படாத புது இடத்தை மாநாட்டுக்காக தேர்வு செய்துள்ளனர். அங்கு 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடும், அதன் எதிரேயுள்ள 300 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தமும் அமைக்க கட்சி…
சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டதாகவும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜூலை 16ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது எனக் கூறி, புதுக்குடி…
பழனியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். பழனியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி ஜெயந்தி. செந்தில்குமாரின் மைத்துனர் சக்திவேல் இவர்கள் கூட்டாக சேர்ந்து ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தை பழனியில் துவங்கி உள்ளனர். ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தின் அட்மினாக சக்திவேல் செயல்பட்டு வந்துள்ளார். நிறுவனத் தலைவராக செந்தில்குமார் இருந்துள்ளார். இவர்களது தொண்டு நிறுவனத்தின் மூலமாக பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், வால்பாறையில் அரசின் உதவியுடன் உண்டு உறைவிட பள்ளி நடத்தி வருவதாகவும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி உள்ளனர். மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு மாதம் மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஏஜெண்டுகள் மூலமாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.தொண்டு நிறுவனம் நடத்தி…
மூன்றுவருட இடைவெளிக்குப் பிறகு சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2025 போட்டித் தொடரின் அறிவிப்பு நிகழ்ச்சி எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, மூன்றுவருட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அண்மையில் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரில் பார்வையாளர் மாடம் திறக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சி. நாம் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது நமது டென்னிஸ் வரலாற்றில் ஒரு மைல் கல். 12 கோடி ரூபாயை சென்னை…
தேர்தல் கால வாக்குறுதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரணை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜாக் ) அமைப்பு சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை…
வாக்குச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கை பணியை சரியாக பின்பற்றவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும், சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை இயக்கம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்தமிழ்நாட்டோட மண் – மொழி – மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ஆம் தேதி தொடங்கினோம். தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும், பணிகளையும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் விவரங்கள் காந்தி ராஜன் தலைமையில், பி.ஆர்.ஜி. அருண்குமார், ராமகருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர், கோவையில் உள்ள அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை கைதிகள் பணிபுரியும் பெட்ரோல் பங்க்கிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குப் பணிபுரியும் கைதிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர். தொடர் ஆய்வுகள் மற்றும் கூட்டம் மேலும், இக்குழுவினர் கோவை மத்திய சிறை, மருதமலை கோவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். இன்று மாலை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர்.
தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை போலீசார் திசை திருப்புவதாக அவர் போயஸ் கார்டனில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதியின் குற்றச்சாட்டுகள் மோகன் பார்த்தசாரதி கடந்த ஜூலை 15-ஆம் தேதி டி. நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்ததாகக் கூறினார். ஜூலை 10-ஆம் தேதி காலை 11 மணியளவில் மூன்று நபர்கள் ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்ததாகவும், அதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணியளவில் அதே ஆட்டோவில் ஏழு நபர்கள் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அலுவலகத்தை நோட்டமிட்டதாகவும், மீண்டும் பிற்பகல் 3:30 மணியளவில் எட்டு நபர்கள் அலுவலகத்தை நோட்டமிட்டதாகவும் அவர் கூறினார். பரவும் வதந்திகள் குறித்த விளக்கம்…