Author: Editor TN Talks
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரனிடம் முதலமைச்சர் வழங்குகிறார். அதேபோல், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு…
தமிழகத்தில் 28 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம், கடந்த ஜனவரி 5ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு ஊரக உள்ளாட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறி, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு மாதம் வரை என அறிவிக்கப்பட்டது. அதன்படி பதவிக் காலம் முடிந்த நிலையில், 2026 ஜனவரி 5ம் தேதி வரை, சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், 2026 ஜன., மாதம் வரை…
நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது. தேர்தலுக்கான காலங்கள் இன்னும் கிடக்கிறது. நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி. அவர் முடிவு எடுக்க முடியாமல் ஏதோ சக்திகள் தடுத்தால் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்,. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 மற்றும் 6ம் தேதிகளில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கேடிஆர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய அவர், ஓரணியில் தமிழ்நாடு என்ற கருத்து காலம் முடிந்த பின்பு தான் ஸ்டாலினுக்கு யோசனையாக வந்துள்ளது. ஆட்சி முடிய போகும் நேரத்தில் ஓரணியில் அவரது குடும்பம்தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை என்றார். அதிமுக- பாஜக கூட்டணியானதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்களது கூட்டணி…
கோவை மாநகர ஆணையராக இருக்கும் சரவணசுந்தர், திமுகவின் மாவட்ட செயலாளர் போல செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக அதிமுகவினர் பேனர் வைக்க காவல்துறையினர் அனுமதியளித்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திமுக அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கோவை உக்கடம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் சட்டையை கழட்டி விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டல் விடுத்தார். மேலும் சக காவலர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நீ என்ன ரவுடியா என்று கேட்டு பொதுவெளியில் காவல்துறை அதிகாரியை கேவலபடுத்தினார். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், திமுக பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ்மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது, நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், கோவை மாநகர மாவட்ட…
வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று நாடு திரும்புகிறார். 5 நாடுகளுக்கு 8 நாட்கள் அரச முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கானா, டிரினிடாட், அண்ட் டொபாக்கோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அந்தந்த நாட்டின் தலைவர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 8 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் பிதமர் மோடி. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மண்டல மாநாடு கழகத்தில் 7 இடங்களில் நடத்தப்படவுள்ளது. முதலாவதாக அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27,…
ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ். 25 வயதான அவர், டென்னிஸ் வீராங்கனை ஆவார். மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார். இன்று மதியம் ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணயில், ராதிகா இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் போடுவதை முழு நேரமாக செய்து வந்ததாகவும், இதனால் தந்தை-மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது தந்தை, துப்பாக்கியால் மகளை சுட்டுக் கொன்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”அவசரநிலை ஒரு தற்காலிக ஒழுங்கை கொண்டு வந்தது என்றும், ஜனநாயக அரசியலின் சீர்குலைவிலிருந்து நிவாரணத்தை வழங்கியது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால், இந்த விதிமீறல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் சர்வாதிகாரமாக மாறியதன் விளைவாகும். அவசரநிலையின் போது எந்த ஒழுங்கு தோன்றியிருந்தாலும், அது நமது குடியரசின் ஆன்மாவின் விலையில் வந்தது ஆகும்’ என குறிப்பிட்டு உள்ளார். இந்தியாவில் அவசர நிலை கொண்டு வந்த இந்திரா காந்தியை 1977-ல் மக்கள் நிராகரித்து பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவித்து இருக்கிறார். இன்றைய இந்தியா 1975-ம் ஆண்டு இந்தியா போல இல்லை என கூறியுள்ள சசிதரூர், நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிக வளர்ச்சியடைந்தவர்களாகவும், பல வழிகளில் வலுவான ஜனநாயகமாகவும் இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். சசிதரூரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இடம் பிடித்துள்ளார். முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் – ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கி நிதானமாக ஆடினர். இந்த இன்னிங்சின் 14 ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி அந்த ஓவரில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பென் டக்கெட் (23 ரன்கள்), ஜாக் கிராலி (18 ரன்கள்) இரண்டு பேரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்…
இந்திய மகளிர் ‘ஏ’ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரு 4 நாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராதா யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டி20 அணியில், மின்னு மணி, ஷபாலி வர்மா, டி. விருந்தா, சஜனா சஜீவன், உமா சேத்ரி, ரக்வி பிஸ்ட், ஸ்ரேயங்கா பாட்டீல், பிரேமா ராவத், நந்தினி காஷ்யப், தனுஜா கன்வர், ஜோஷிதா வி.ஜே, ஷப்னம் ஷகீல், சைமா தாகூர், டைட்டஸ் சாது ஆகியோரும், ஒருநாள் மற்றும் மல்டி டே போட்டியில், ராதா யாதவ் (கேப்டன்), மின்னு மணி , ஷபாலி வர்மா, தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், தனுஸ்ரீ சர்க்கார், உமா சேத்ரி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர்,…
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளி சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கோவையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது பயணத்தின் போது மக்களிடம் உரையாற்றிய அவர், கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று. ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு திமுக தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது அந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தி.மு.க. மாணவர்…