Author: Editor TN Talks
மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக தவெக தலைமை கூறியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு…
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையானை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53 ). இவர் ஆயக்காரன்புலம் ஊராட்சி செயலாளர் பணியாற்றி வருகிறார். இவரை கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணிமாற்றம் செய்ததாலும், இரண்டு மாதம் சம்பளம் வழங்காத நிலையில் மனம் உடைந்து வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு ஊராட்சி ஆணையர் தான் காரணம் என கூறி சுப்பிரமணியன் உடலை நாகை – வேதாரண்யம் சாலையில் ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். சுப்பிரமணியனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சடலத்தை சாலையில் வைத்து மறியல் செய்த இடத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் திருமால் மற்றும் போலீசார் தொடந்து 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டதால் போலீசார் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு…
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை அதாவது புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2024 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் என்.எம்.ஆர் (Nominal Muster Roll) பணியாளர்கள் 133 பேரும், தினக்கூலி பணியாளர்கள் 107 பேரும் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 11-ஆம் நாள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் என்.எம்.ஆர் பணியாளர்களும், தினக்கூலி பணியாளர்களும் 15 முதல் 20 ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பா.ம.க. ஆதரவளித்திருக்கிறது. பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்ற போது சட்டப்பேரவையிலும்,…
கோவையில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக குடமுழக்கு நடைபெற்றது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், எண் வகை மருந்து சாற்றுதல், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி…
தென் மாவட்டங்களுக்கு செல்லும் நான்கு சுங்கச்சாவடிகளின் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதி வரைக்கும் நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 276 கோடி ரூபாய் சுங்க கட்டண பாக்கி செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அரசு தரப்பில் விடுக்கப்பட்ட முறையீட்டை ஏற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணை மேற்கொண்டார். பிரச்சனைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தகவல் தெரிவித்தார். அரசு தரப்பு தகவலை ஏற்று பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் .
கோவையில் பொது இடத்தில் , தொலைத்து விடுவேன் உன்னை , சட்டையை கழற்றி விடுவேன் , என காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி கோட்டை அப்பாஸ் மிரட்டிய வீடியோ வைரல் ஆனது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அதிமுகவினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. அதில் கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் அருகே அதிமுகவினரின் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அதிமுகவினரின் பேனரை அங்கிருந்து திமுகவினர் அப்புறப்படுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கு சமாதான பேச்சு வார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட்ட நிலையில் திடீரென அங்கு வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்…
ஏமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் 2017-ம் ஆண்டு ஏமனில் நிகழ்ந்த தகராறு ஒன்றில் தலால் அப்து மாஹ்தி என்பவர் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்ததாக இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவுக்கு ஏமன் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் 2023-ம் ஆண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. வரும் 16ஆம் தேதி ஏமனில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் தன்னை காப்பாற்றுமாறு நிமிஷா ப்ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசாங்கம் ராஜாங்கரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று அல்லது நாளை பட்டியலிட்டு விசாரணை செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரரின்…
1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு TRB போட்டித் தேர்வு அறிவிப்பு – செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு! தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர் (PG Assistant) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் நோக்கில், போட்டித் தேர்வு நடத்தப்படும் என TRB தெரிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறப்படும் வகையில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 12, 2025 – மாலை 5 மணி வரைTRB அறிவித்தபடி, போட்டித் தேர்வு வரும் செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெறும். தேர்வு நேரம், மைய விவரங்கள் உள்ளிட்ட மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.