Author: Editor TN Talks
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்கள் கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சாமுவேல் பிளஸ்வின் லாய், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”கன்னியாகுமரி நகரில் உள்ளூர் திட்டக்குழுமம், கடலோர கட்டுப்பாட்டு மண்டலம், உயர கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏராளமான கட்டிடங்கள், தனியார் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ஆனல் கடலோர கட்டுப்பாட்டு மண்டலம் விதிகளை மீறி கன்னியாகுமரி நகரில், 100-க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கடந்த 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்திருந்தபோது உயர் நீதிமன்றம் விதிமீறல் செய்யப்பட்ட அனைத்து விடுதிகளை தரப்பினராக சேர்க்க உத்தரவிட்டிருந்ததுடன் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற ஊரமைப்பு துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு…
மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. Parental window என்ற மென்பொருளை பயன்படுத்தி சிறார்கள், தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக புளுவேல் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகள், ஆபாச இணைய தளங்களை பார்க்க முடியாமல் அந்த இணைய தள முகவரியை பெற்றோர்கள் தடை செய்து கட்டுபடுத்தலாம். இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்திய தொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா…
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்த விவகாரத்தில், ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அரசுக்கு களங்கம் ஏற்படுவதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வல்லக்கோட்டை முருகன் கோவில் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நல்லாட்சி நடக்கும் போது அதிகாரிகள் செய்யும் தவறால் ஆட்சிக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டு விட கூடாது உறுதியாக இருக்கிறேன். சமூக விடுதிகள் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார். ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறால் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இனி வரும் காலங்களில் இது போன்ற அவலங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சில துறைகளில் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தான் ஆட்சியாளர்களுக்கு களங்கம் ஏற்படுகிறது.…
The old guard 2 நெட் பிளிஸ் வந்திருக்கிறது..சாகவே முடியாதவர்கள் எப்படி தங்கள் இலக்கை அடைகிறார்கள் என்பதாக இருக்கிறது.. செம்ம ஷார்ப்பான சண்டைகள், சேசிங் காட்சிகள் என்று அபாரமாகவே வந்து இருக்கிறது. ஒரு சண்டை காட்சி இருக்கிறது ஏதோ பப்பில் இருப்பது போல எடுத்து இருக்கிறார்கள். அது தெருவில் தான் நடக்கிறது. அந்த மியூசிக் நமக்கு அப்படி தோன்றவைக்கிறது. அது போகட்டும், Charlze அவரின் ஸ்டைலிஸான லுக் மட்டுமே இந்த திரைப்படத்தை பார்க்கவைக்கிறது. செம்ம மேனரிசம். ஒவ்வொரு பாத்திரங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.Veronica, kiki Layane அதிலும் கீகி யின் அழகு சூப்பர். இவ்வளவு ஆக்ஷன் காட்சிகள் இருந்தும் எங்கேயும் வன்முறையின் தீவிரத்தை இந்த படத்தில் காட்டவே இல்லை. முழுக்க முழுக்க அழகாவே இருக்கிறது. இந்த படம். அவர்களின் டார்க் உலகம். அதில் யார் முதலில் பிறந்தது. எதற்காக umaa thurman தேடவேண்டும். அதன் பின்புலம் என்ன என்று மிக நிதனமாகவே…
இவ்வளவு ஸ்ராங்கனா டிவின்ஸ் சார்ந்த ஒரு படத்தை பார்த்ததே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. தியேட்டரில் தவற விட்டதற்கு வருத்தம் தான் படவேண்டி இருக்கிறது. காரணம் நம்மவர்கள் எழுதும் பொறுப்பற்ற விமர்சனம். மிக அடர்த்தியான தீம் .அதை தொட்டு தொடர்கிற கதை. டுவின்ஸில் ஒருவர் பிரிந்தால் என்னவாகும்?. உண்மையில் அது தாங்கமுடியாத துயரத்தை அவர்களுக்கு கொடுக்கும். மாற்றான் படத்தில் வருவது போல. அதுவும் சிறுவயதில் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த இரட்டையர்களின் பள்ளி, அதை சார்ந்து நடக்கும் ஈகோ. அதை தொடர்ந்து நடக்கும் ஒரு கொலையில் இன்னொருவனின் இழப்பு. பின் அதற்கான பழிவாங்கல்!.படம் என்று தொடர்கிறது…. சிறுவர்கள் தங்களை தாய்- தந்தையராக மாற்றிக்கொள்ளும்.அந்த ஒரு காட்சியே போதும் டுவின்ஸ்களுக்கு நம்மை விட அவர்கள் ஏன் சேர்ந்து இருக்கிறார்கள்? என்று.!.. இது வழக்கம் போல இருக்கும் டுவின்ஸ் சார்ந்த சினிமா அல்லா…, என்பதை உணர்ந்து பார்த்தாலே போதும் இந்த ”லெவன்…
திருப்பூர் ரிதன்யா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை என்று ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவநாசி அருகே வசித்தவர் ரிதன்யா. அவர் திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். கணவர் மாமனார் மாமியார் சித்ரவதை தாங்க முடியவில்லை என தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதன்பேரில் ரிதன்யாவின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். ரிதன்யா பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததை தொடர்ந்து மாமியார் சித்ரா தேவி கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு அடுத்த நாளே அவருக்கு மட்டும் ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்தார். இதற்கு ரிதன்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு வழங்கி உள்ளார். அதனை ஏற்று ஜாமீன் மனு விசாரணை 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை உடற்கூறாய்வு சோதனை முடிவு வழங்கப்படவில்லை. இந்த வழக்கில்…
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சகர் பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் 14 வயதில் நிரம்பியராகவும் 24 வயதிற்கு உட்பட்டவர் ஆகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட நடிகை அருணா வீட்டில் அமலாக்க துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரு லிட்டர் மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் அருணா. நீலாங்கரையில் தனது கணவர் மோகன் குப்தாவுடன் வசித்து வரும் இவரது வீட்டில் இன்று காலை அமலாக்க துறையினர் திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர். கட்டுமானம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு மேற்கொள்ளும் பணியினை செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வரும் மோகன் குப்தா, தனது நிறுவனம் மூலம் செய்த பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை எடுத்து, இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை அருணாவின் கணவர் மோகன் குப்தா கட்டட பொறியாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் போதிலும், தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்திலும் வழக்கம் போல அரசு ஊழியர்கள் வருகை தந்துள்ளனர் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகத்தில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருருந்தனர். போராட்டத்தில் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க கூடாது எனவும், தமிழ்நாடு அரசு பணிக்கு வராத அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் படிகள் பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது மேலும், பணிக்கு வருகை தந்தவர்கள் வருகை தராதவர்கள்…
குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையத்தின், ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு தழுவிய வேலை…