Author: Editor TN Talks
இயக்குநர் அட்லீ தமிழை தாண்டி பான் இந்தியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அவர் எடுத்த ஜவான் திரைப்படம் ரூ.1,160கோடி வசூலை குவித்தது. தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறுபுறம் அல்லு அர்ஜூன் புஷ்பா பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார். இந்த இரு கூட்டணியும் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. சன்பிக்சர்ஸ் இப்படத்தை ரூ.800கோடியில் தயாரிக்கிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம் அட்லீ. அதாவது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே கதாபாத்திரத்திற்காக டுவைன் ஜான்சனையும்…
கேராளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் செவிலிய்லர் நிமிஷா பிரியா (36). இவ்ர் மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவிற்கு திரும்பினர். அதே ஆண்டு ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷாவால் நாடு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து அங்கேயே செவிலியராக நிமிஷா வேலை பார்த்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் தற்போது வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரை காப்பாற்ற அவரது தாய் போராடி வருகிறார். ஏமன் நாட்டு சட்டப்படி, இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மன்னிப்பு கேட்டு, அவர்கள் கேட்கும் பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி…
மதுபோதையில் வகுப்பில் விழுந்து கிடந்த ஆசிரியர் பற்றி தமிழக அரசிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்? திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது.…
காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் வெகு விமர்சையாக தொடங்குகியது. வரும் 10-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா மாங்கனி இரைத்தல் நடைபெற உள்ளது. காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த விழாவின் ஒருபகுதியாக கடந்த 7-ந் தேதி பரமதத்த செட்டியாருக்கும் புனிதவதியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையே ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தேறியது. வரும் 10-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாரதனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து…
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர்கள் கிருஷ்ணா…
அவிநாசியில் ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது விரைவான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்த திரைப்பட நடிகை அம்பிகா உருக்கமாக கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை என்றார். நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. ரிதன்யாவின் தற்கொலையில் 11 நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தாமதமாகும். மற்ற நாடுகளில் உள்ளது போல நமது நாட்டிலும் தண்டனைகள் கடுமையானால்தான் இதுபோன்ற தற்கொலை மரணங்கள் குறையும். நடிகைதானே வந்து பேசுகிறார் என நினைக்காமல் ரிதன்யாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அம்பிகா கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜுலை 21 முதல் ஜுலை 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதன் இரண்டாவது அமர்வு ஆகஸ்ட் ஒன்று முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். இடையில் ஆகஸ்ட் 12 முதல் 18-ந் தேதி வரை கூட்டத்தொடருக்கு விடுமுறை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள், விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் விவாதிப்பதற்காக திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எம்.பி.க்கள்…
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த 2023ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார். இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை முதன்மை…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி…
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணி முடிந்து நேற்று இரவு திரும்பிய பொழுது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியகணேஷ் என்பவர் மருத்துவர் ரமேஷ்பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கத்தியால் குத்திய பாண்டிய கணேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக…