Author: Editor TN Talks
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தோல்விக்கு பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ”கடினமான ஒன்று. தோல்வியை 2 தருணங்கள் கொடுத்தன. 200/5 என தடுமாறிய இந்தியாவை சுருட்ட முடியாமல் போனதும், 80/5 என நாங்கள் தடுமாறியதும் முக்கிய காரணங்களாக அமைந்தன. அங்கிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. 200/5 என இந்தியா தடுமாறிய போது நீங்கள் வலுவான நிலையில் இருந்தீர்கள். ஆனால் போட்டி ஆழமாக செல்லும் போது பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அது இந்தியாவுக்கு அதிக பொருத்தமாக அமைந்தது.…
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது. வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகம், பீகார்,…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விளையாட்டு வீரர்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். வங்கக் கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து, முருகப்பெருமான் மக்களைக் காத்து அருள்பாலித்த புண்ணிய பூமி திருச்சீரலைவாய். வேண்டி விரதம் இருந்து மனமுருகிக் கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்புரியும் நம் வேலவன் எனவும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது. வங்க கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து முருகப்பெருமான் மக்களை காத்து அருள்பாலித்த இடம் திருச்சீரலைவாய்.… pic.twitter.com/GCBo8PJeJr — Dr.L.Murugan (@DrLMurugan) July 7, 2025 தமிழகத்தில் கடந்த…
போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இன்று (ஜூலை 7, 2025) சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். மீனவர்கள் மீட்பு நடவடிக்கை: ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற சிவகங்கை மற்றும் உவரியைச் சேர்ந்த 15 மீனவர்கள், போர் பதற்றம் காரணமாகத் தொழில் செய்ய முடியாமல் தவித்துள்ளனர். இத்தகவல் நயினார் நாகேந்திரனுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அவர் வெளியுறவுத் துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு மீனவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய உதவினார். ஈரானிலிருந்து நேரடியாக விமானம் மூலம் வர முடியாததால், மீனவர்கள் கப்பல் மூலம் துபாய் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக சென்னை வந்தடைந்தனர். இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவிய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக செலவில் மீனவர்கள் அழைத்து வரப்பட்டதாகவும், ஈரானின்…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா இன்று (ஜூலை 7, 2025) அன்று காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவுக்காக ரூ.300 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய தகவல்கள்: தேதி: ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) நேரம்: காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் முக்கியத்துவம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குடமுழுக்கு நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள்: ஜூலை 1 ஆம் தேதி முதல் காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு ஏற்பாடுகள்: குடமுழுக்கு விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி விடுமுறை…
2026-ம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள் மெல்ல மெல்ல தொடங்கையுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது சூறாவளிப் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டனர். அந்த வகையில் நடிகர் விஜய்யும் தனது அரசியல் பயணத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளார். ஜனநாயகன் படத்தை முடித்த விஜய், தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டுக்கான த.வெ.க. செயற்குழு கூட்டம் சமீபத்தில் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை பணியும் தொடங்கியது. தற்போதைய நிலையில், இதுவரை ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வில் கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதே நிலையில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். வீடு, வீடாக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அதேப் போல அதிக வசூல் செய்யும் நடிகராகவும் வலம் வருகிறார். நடிப்பை தாண்டி கார் பந்தயங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். சுமார் 60 படங்களில் நடித்துள்ள அஜித், சமீபமாக நடித்து வரும் படங்களில் தனது திறமையை வெளிக்கொணரும் வகையில், ஒரு ரேஸ் சேசிங் சண்டை காட்சிகள் இடம்பெறும் வகையில் நடித்து விடுவார். ரசிகர்களாலும் அது மிகவும் ரசிக்கப்படும். இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், சினிமாவிற்கு சின்ன பிரேக் விட்டுவிட்டு ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் பெல்ஜியமில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது. தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் சமீபத்தில்…
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடற்கரையில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, 15 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்து வந்தது. பிறகு ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கானொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கடந்த ஒரு வருடமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாள்தோறும் பலவிதமான பூஜைகளும், யாகங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளை காலை குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து…
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க சென்று மீண்டும் இந்தியாவில் வந்து மருத்துவராக வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவு சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மருத்துவ மாணவர்கள் சங்க வெளிநாட்டு பிரிவு நிர்வாகி வசந்த் பிலிப்ஸ் அபிஷேக், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 1,400 மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து தமிழகம் திரும்புகின்றனர். அவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதி தகுதி பெற்றதும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் சார்பில், தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் பிறகே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தடையில்லா சான்று பெற்று, மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். மேலும், நிரந்தர டாக்டராகவும் பதிவு செய்ய முடியும். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, தற்காலிக தகுதி சான்று…